"இந்தியா" கூட்டணி! ஸ்டாலின் பக்கம் திரும்பிய போகஸ்! வழங்கப்படும் மெகா பதவி! தேசிய அரசியலில் ட்விஸ்ட்
சென்னை: இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் இன்று மற்றும் நாளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

எதிர்பக்கம் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி இணைந்து வலிமை அடைந்து வருகின்றன.
ஆலோசனை: 26 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளன. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளன.
இன்று நடக்கும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு! பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து மும்பையில் இன்று தொடங்க உள்ள 3வது கூட்டத்தில் புதிதாக 2 கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்கிறார்கள்.
தலைமை யார்?: புதிய கூட்டணிக்கு சோனியா காந்தி தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் பதவி அளிக்கப்பட வாய்ப்பு இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக்கான தலைவர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பிரதமர் வேட்பாளராக எதிர்காலத்தில் நிதிஷ் குமார் தேர்வாகும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஒருங்கிணைப்பாளர் பதவி நிதிஷுக்கு வழங்கப்படலாம் ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள். இந்த கூட்டணி உருவாவதில் முக்கிய காரணமாக இருந்தவர் ஸ்டாலின்.
அதோடு கூட்டணிக்குள் காங்கிரஸ், மம்தா போன்ற எதிர் எதிர் துருவங்கள் இணைய காரணமாக இருந்தவர் ஸ்டாலின். இதன் காரணமாகவே அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்கிறார்கள். தேசிய அளவிலும் திமுகவை பாஜக நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளது. திமுகவின் எழுச்சி காரணமாகவே பாஜக இப்படி எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறப்படுகிறது. அதனால் ஸ்டாலினுக்கு இந்த கூட்டத்தில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆகியோருக்கு கூட்டணியின் குழுவின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கான குறைந்தபட்ச திட்ட அறிக்கை, எப்படி கட்சிகளை ஒன்று இணைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications