Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி விமானம் பயணம் கனவுதான்.. நாளை முதல் விமான டிக்கெட் விலை கட்டுப்பாடு நீக்கம்.. உயரும் கட்டணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமானப் பயணம் இனி எட்டாக்கனி ஆகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த வாரத்திலிருந்து உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயரப்போகும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் குளறுபடிகளால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அப்போது, அவசரத்தைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு 'லகான்' போட்டது. அதன்படி, டிசம்பர் 6, 2025 அன்று ₹18,000-க்கு மேல் (வரிகள் தவிர்த்து) கட்டணம் வசூலிக்கக்கூடாது என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

flight ticket price increase

தற்போது நிலைமை சீராகிவிட்டதாகக் கருதும் அரசு, வரும் திங்கட்கிழமை (மார்ச் 23) முதல் இந்த விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்த முடிவு செய்துள்ளது.

ஏன் இந்த விலையேற்றம்?

ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய 'இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு' (Federation of Indian Airlines), அரசுக்கு ஒரு காரசாரமான கடிதம் எழுதியிருந்தது. அதில், "ஈரான் போன்ற நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றத்தால், விமான எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில் கட்டணக் கட்டுப்பாடு நீடித்தால், நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து முடங்க வேண்டிய நிலை ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

கூடுதல் தகவலாக, விமானத்தில் 60 சதவீத இருக்கைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதியையும் நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டணம் எவ்வளவு இருக்கும்?

கட்டண உச்சவரம்பு நீக்கப்பட்ட பிறகு, முக்கிய நகரங்களுக்கு இடையேயான தோராயமான விமானக் கட்டண நிலவரம் இதோ:

சென்னை - டெல்லி: இந்த வழித்தடத்தில் கட்டணம் ₹6,800 முதல் ₹18,000 வரை இருக்க வாய்ப்புள்ளது. முன்பதிவு செய்யும் நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்.

சென்னை - மும்பை: தொழில் நகரங்களுக்கு இடையேயான பயணம் என்பதால், இதன் கட்டணம் ₹5,500 முதல் ₹14,000 வரை எகிறக்கூடும்.

டெல்லி - மும்பை: இந்தியாவின் பிஸியான வழித்தடமான இதில், குறைந்தபட்சம் ₹6,300-லிருந்து தொடங்கி, கடைசி நேர முன்பதிவுகளில் ₹15,000-ஐத் தாண்டலாம்.

பெங்களூரு - டெல்லி: ஐடி ஊழியர்கள் அதிகம் பயணிக்கும் இந்தத் தடத்தில் கட்டணம் ₹7,200 முதல் ₹18,000 வரை நிலவ வாய்ப்புள்ளது.

டெல்லி - கொல்கத்தா: கிழக்கு இந்தியாவை இணைக்கும் இந்தத் தடத்தில் ₹5,700 முதல் ₹15,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம்.

சென்னை - பெங்களூரு: மிகக் குறுகிய கால பயணம் என்றாலும், எரிபொருள் கூடுதல் கட்டணத்துடன் சேர்த்து இது ₹3,500 முதல் ₹8,000 வரை செல்லலாம்.

மும்பை - பெங்களூரு: தென் மற்றும் மேற்கு இந்தியாவின் இணைப்புப் பாலமான இதில் கட்டணம் ₹4,800 முதல் ₹12,000 வரை இருக்கக்கூடும்.

ஹைதராபாத் - டெல்லி: இந்த வழித்தடத்தில் கட்டணம் ₹5,600 முதல் ₹14,500 வரை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை - கோவை: தமிழகத்திற்குள்ளான பயணங்களுக்கு ₹3,800 முதல் ₹9,000 வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.

புனே - டெல்லி: இந்த நீண்ட தூரப் பயணத்திற்கு ₹6,200 முதல் ₹16,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

அரசு கொடுத்த 'வார்னிங்'!

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், விமான நிறுவனங்களுக்கு ஒரு செக் வைத்துள்ளது அமைச்சகம்:

கட்டணங்கள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும்.

பண்டிகை காலங்களிலோ அல்லது அவசரக் காலங்களிலோ பயணிகளின் இயலாமையைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது.

மீறினால், பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் விலைக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், "உங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கிறோம், ஆனால் அதை வைத்துப் பயணிகளின் தலையில் மிளகாய் அரைக்கக் கூடாது" என்பதே அரசின் தற்போதைய நிலைப்பாடு.

அடுத்த வாரம் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள், இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது புத்திசாலித்தனம். இல்லையென்றால், மேகக்கூட்டங்களுக்கு நடுவே பறக்கும் முன்பே உங்கள் பேங்க் பேலன்ஸ் 'லேண்டிங்' ஆகிவிடும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+