5Gனு காட்டுது.. ஆனா லோட் ஆகுது! இந்த பிரச்சனை வராது.. நாடு முழுவதும் புதிய மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொபைல் என்னவோ 5G தான்.. அதில் போட்டிருக்கும் சிம்மும் 5G சிக்னலை காட்டுது. ஆனா.. நெட் லோட் ஆகி சுத்துவதை என நம்மில் பலர் பார்த்திருப்போம். நாடு முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில், பிரச்சனையை சரி செய்ய தொலைதொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அதாவது 5 நெட்வொர்க் ரேடியேஷன் வரம்பை 2 மடங்காக உயர்த்தியிருக்கின்றன. இது சர்வதேச தரத்திலான அதிகரிப்பு என்றும் அடுத்த மாதம் முதல் இது அமலுக்கு வருவதாகவும் டெலிகாம் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

India

நமக்கு மொபைலில் 5G சிக்னல் இருந்தாலும், இன்டெர்நெட் எடுக்காமல் சுத்துவதற்கு காரணம், இந்த ரேடியேஷன் லெவல்தான். அதாவது டவரிலிருந்து வெளியேற்றப்படும் ரேடியேஷனின் அடர்த்திதான் குறைவாக இருப்பது இதற்கு முக்கிய காரணம். சர்வதேச அளவில் இந்த அடர்த்தி 10 வாட்ஸ்/சதுர மீட்டர் என்கிற அளவில்தான் இருக்கும். ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 137 நாடுகளில் இந்த அளவுதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, 5 வாட்ஸ்/சதுர மீட்டர் என்று மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. தற்போது இந்த அளவை சர்வதேச தரத்திற்கு.. அதாவது 10 வாட்ஸ்/சதுர மீட்டர் என உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும். ரேடியேஷன் அளவு அதிகரிக்கப்பட்டதால்.. மனிதர்களுக்கு, பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று சந்தேகம் வரலாம். அப்படியெல்லாம் எந்த பாதிப்பும் வராது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே தேவையற்ற அச்சம் வேண்டாம்.

மத்திய அரசின் இந்த முடிவால் வோடஃபோன், ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களின் பயனாளர்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள். வோடஃபோன் தற்போது 5ஜி சேவைகளை தொடங்கி வருகிறது. புதிய கதிர்வீச்சு வரம்புகள்.. இந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கை இன்னும் வேகமாக்கும். அதேபோல.. ஏர்டெல் மற்றும் ஜியோ ஏற்கெனவே பெரும்பாலான 5ஜி டவர்களை வைத்திருக்கிறது. எனவே இந்த அப்டேட் மூலம் புதிய டவர்களை வைக்காமல்.. தங்கள் சிக்னலை வலிமையாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்.

5ஜி அலைவரிசை மற்றும் இன்டெர்நெட் டிராபிக் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற தரமான சேவையை வழங்குவதற்காக.. 5 வாட்ஸ்/சதுர மீட்டரிலிருந்து 10 வாட்ஸ்/சதுர மீட்டர் என்கிற தளர்வை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+