மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்! பாலஸ்தீனம், பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்தியா! யாருக்கு எந்த இடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பாகிஸ்தான், பாலஸ்தீனத்தை விட பின்தங்கிய இடத்தில் இந்தியா இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடையும், செய்வதற்கு ஒரு வேலையும் இருந்தாலே போதும் அவர்கள் மகிழ்ச்சியானவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், பல நாடுகளில் இவை அனைத்தும் இன்னும் கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பாகிஸ்தான், பாலஸ்தீனத்திற்கு பின்னால் இந்தியா இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

India is behind Palestine in the list of happiest countries in the world

சர்வதேச மகிழ்ச்சி தினத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐநா வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறது. இதில் முதல் இடத்தில் பின்லாந்து இருக்கிறது. ஏழாவது ஆண்டாக தொடர்ந்து இந்த இடத்ததை பின்லாந்து தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. பின்லாந்தை தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை முதல் 10 இடங்களில் இருக்கின்றன.

இந்தியா இந்த பட்டியலில் 126வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு 111வது இடத்தில் இருந்தது. தற்போது போர் நடைபெற்று வரும் பாலஸ்தீனத்தை விட இந்தியா பின்தங்கி இருக்கிறது. அதாவது, இந்தியாவில் வாழ்பவர்களை விட பாலஸ்தீனத்தில் வாழ்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதுதான் இதன் அர்த்தம். பாலஸ்தீனம் மட்டுமல்லாது, பாகிஸ்தான், லிபியா, ஈராக், நைஜர் போன்ற நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது.

இந்தியாவில், கல்வி அறிவு பெற்றவர்களை விடவும், உயர் சாதியினரை விடவும் கல்வி அறிவு பெறாதவர்கள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினர் ஆகியோர் மகிழ்ச்சியாக இல்லை என்று ஆய்வு கூறுகிறது. சுகாதார வசதி, வாழ்வாதார சிக்கல்கள் போன்றவை இவர்களின் மகிழ்ச்சி குறைவுக்கான காரணங்களாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றும் 30 நாட்களில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இதுபோன்ற கணக்கெடுப்பு விவரங்கள் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் 111வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 126வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+