ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க ஏற்பட்டுள்ள வணிக ரீதியிலான சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு, நம் நாட்டின் முக்கிய பொருளாதார காரணிகளில் ஒன்றாக விளங்கும் மீன்பிடி தொழிலை நிலைகுலையச் செய்துள்ளது. "இப்படியே போனால் கடலுக்குள் போட் போகாது... சந்தையில் மீன் கிடைக்காது" என மீனவர்கள் கண்ணீர் மல்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

India LPG crisis 2026 and

அடுப்பு எரியல... அப்புறம் எப்படி போட் நகரும்?

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள் ஒருமுறை கடலுக்குள் சென்றால் 7 முதல் 25 நாட்கள் வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டும். சுமார் 40 தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் சமைக்க காஸ் சிலிண்டர்கள் தான் ஆதாரம். அதோடு போட் இயக்க பெட்ரோல், டீசல் அவசியம்.

"பெட்ரோல், டீசல் சிலிண்டர் இல்லைன்னா படகுகளை அனுப்ப முடியாது. இது மீன்பிடித் தொழிலுக்கு விழும் மிகப்பெரிய அடி" என ஆதங்கப்படுகிறார் கோவா படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோஸ் பிலிப். ஒருமுறை கடலுக்கு செல்ல குறைந்தது 7 சிலிண்டர்கள் தேவைப்படும் நிலையில், ஸ்டாக் இல்லாததால் பல படகுகள் கரையிலேயே நங்கூரமிட்டு நிற்கின்றன.

பற்றாக்குறை... உயருமா மீன் விலை?

கோவாவில் மட்டும் சுமார் 824 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளும், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் உள்ளன. பெரிய படகுகள் முடங்குவதால், சந்தைக்கு வரும் மீன்களின் வரத்து கடுமையாக குறைய வாய்ப்புள்ளது. இது நேரடியாக மீன் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தும் என அஞ்சப்படுகிறது.

பணஜி மற்றும் மாலிம் ஜெட்டி பகுதிகளில் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. "தினமும் 100 சிலிண்டர்கள் வரை தேவைப்படுகிறது. மாற்று டீலர்களிடம் கேட்டாலும் கைகொடுக்க ஆளில்லை" என வேதனை தெரிவிக்கின்றனர். சென்னை, கொச்சியிலும் இதே நிலைதான்.

மாற்று வழி என்ன? மீனவர்களின் தவிப்பு

சிலிண்டர் கிடைக்காத பட்சத்தில் வேறு அடுப்புகளுக்கு மாறலாமா என ஒரு தரப்பு யோசித்து வருகிறது. ஆனால், "வேறு அடுப்பிற்கு மாறினால் செலவு இரட்டிப்பாகும், அது மீன் விலையில் தான் வந்து முடியும்" என்கின்றனர் மீனவர்கள். 30 முதல் 40 பேருக்கு சமைக்க மின்சார அடுப்புகள் செட் ஆகுமா என்பதும் கேள்விக்குறியே.

தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்?

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்.பி.ஜி (LPG) தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் சுமார் 60% முதல் 80% வரை கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால், இந்த கடல்வழிப் பாதை அடைப்பு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு (Commercial Cylinders) கடும் தட்டுப்பாடு நிலவுகிறது; இதனால் உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசு முன்னுரிமை அளித்தாலும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு வீட்டிற்கு வந்து சேர எடுக்கும் கால அவகாசம் கணிசமாக அதிகரித்துள்ளது, இது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தனது எல்.பி.ஜி தேவையில் 60% முதல் 80% வரை இறக்குமதியைத்தான் நம்பியுள்ளது. நாம் வாங்கும் இந்த காஸில் பெரும்பகுதி சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது.

இந்தப் பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து கிளம்பும் எந்தவொரு கப்பலும், ஹார்முஸ் ஜலசந்தி எனும் குறுகிய கடல் பாதை வழியாகத்தான் அரபிக்கடலுக்குள் நுழைய முடியும்.

பகீர் பின்னணி: இந்தியா இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி-யில் சுமார் 90% இந்தப் பாதை வழியாகத்தான் வருகிறது. தற்போது நிலவும் போர் பதற்றத்தால், ஈரானிய புரட்சிகர காவல்படை இந்தப் பாதையைக் கட்டுப்படுத்துவதால் அல்லது கப்பல் காப்பீட்டு நிறுவனங்கள் அங்கு செல்ல மறுப்பதால், இந்தியா வர வேண்டிய 'கேஸ் கப்பல்கள்' நடுக்கடலில் தவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+