சிக்கலுங்க! இந்தியாவின் கண் இமைக்கு அருகே.. இதுவரை இல்லாத பிரச்சனை.. எந்த நாட்டிற்கும் இல்லாத சவால்!
சென்னை: இந்தியாவின் கண் இமைக்கு அருகிலேயே தற்போது புதிய பிரச்சனைகள் ஏற்பட உள்ளன. இதுவரை ஒரு பக்கம் மட்டுமே இருந்த பிரச்சனைகள் தற்போது இன்னொரு பக்கமும் வர தொடங்கி உள்ளன. அது என்ன பிரச்சனை? இந்தியா இதை எப்படி சமாளிக்க போகிறது என்று இங்கே பார்க்கலாம்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்து உள்ளது. அங்கே தொடர்ச்சியாக நடந்த மாணவர் போராட்டம் மக்கள் புரட்சி போராட்டமாக மாறிய நிலையில் தற்போது அங்கே அரசு கவிழ்ந்து உள்ளது. முக்கியமாக ஷேக் ஹசீனா நாட்டை விட்டே வெளியேறி உள்ளார். அவருக்கான அமெரிக்கா, இங்கிலாந்து விசா ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதனால் அவர் பல வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில்தான் அவர் தற்போது வரை உள்ளார். இனி அவர் எங்கே செல்வார். இந்தியாவில் ஏதாவது சேப் ஹவுசில் இருப்பாரா அல்லது வேறு நாடுகளுக்கு பறந்து செல்வாரா அல்லது தலைமறைவாகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிற்கு சிக்கல்: இந்தியாவிற்கு இது புதிய விதமான சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனென்றால்.. ஏற்கனவே பாகிஸ்தானில் தீவிரவாதம் உச்சத்தில் உள்ளது. அங்கே பயிற்சி பெறும் தீவிரவாதிகள் இந்தியா முழுக்க தாக்குதல் நடத்த அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அதே போல் லடாக், காஷ்மீரில் பாகிஸ்தான், சீனாவின் ஊடுருவல் உள்ளது. அருணாசலப்பிரதேசத்திலும் சீனாவின் ஊடுருவல் உள்ளது. இப்போது வங்கதேச எல்லை மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. ஆனால் அங்கேயும் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. ராணுவ ஆட்சியோ.. அல்லது எதிர்க்கட்சிகளின் ஆட்சியோ அது இந்தியாவிற்கு ஆதரவாக இருக்க வாய்ப்பு குறைவு.
அப்படி இருக்கும் பட்சத்தில் அங்கே கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகலாம். இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் அங்கே பயிற்சி மேற்கொள்ளலாம். பாகிஸ்தான் அமைப்புகள் வங்கதேசம் வழியாக இந்தியா உள்ளே நுழையலாம். அல்லது வங்கதேசத்திலேயே புதிய தீவிரவாத அமைப்புகள் தோன்றி அவை இந்தியா உள்ளே நுழையலாம்.
இப்படித்தான்.. இத்தனை காலம் இல்லாமல் இருந்த பிரச்சனைகள்.. இந்தியாவின் கண் இமைக்கு அருகிலேயே தற்போது புதிய பிரச்சனைகள் ஏற்பட உள்ளன. இதுவரை ஒரு பக்கம் மட்டுமே இருந்த பிரச்சனைகள் தற்போது இன்னொரு பக்கமும் வர தொடங்கி உள்ளன. இதை எப்படி இந்தியா சமாளிக்க போகிறது என்ற கேள்வி உள்ளது.
எல்லா நாடுகளுக்கும் எல்லை பிரச்சனை இருக்கும். ஆனால் இந்தியாவிற்கு மட்டுமே தற்போது எல்லா எல்லைகளிலும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. வங்கதேச ஆட்சி கவிழ்ப்பு காரணமாக.. இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டு நாட்டு உறவு உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஷேக் ஹசீனா வெளியேற்றம் காரணமாக இந்தியா வங்கதேசம் உறவு இனி நீடிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இப்போது வங்கதேச அரசு உடைய காரணம் அமெரிக்கா செய்த வேலை அல்லது சீனா செய்த வேலை என்று கூறப்படுகிறது. இரண்டில் ஒரு நாடு பாகிஸ்தான் மூலமாக வங்கதேச ஆட்சியை கவிழ்த்து உள்ளது.
இதை இந்தியா கணிக்க தவறிவிட்டது. இல்லையென்றால் இந்தியா இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட தவறிவிட்டது என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications