இந்தியா பாகிஸ்தான் மீண்டும் போர் செய்யும்.. பெரிய ரிஸ்க்.. அமெரிக்க கோர்ட்டில் சொன்ன டிரம்ப்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்திற்கான நீதிமன்றத்தில் அதிபர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குகள் நடந்து வருகின்றன. International Emergency Economic Powers Act (IEEPA) என்ற சட்டத்திற்கு எதிராக வழக்குகள் நடந்து வருகின்றன.

International Emergency Economic Powers Act (IEEPA) என்ற சட்டத்தை பயன்படுத்தியே டிரம்ப் உலகின் பல நாடுகள் மீது வரியை விதித்து வருகிறார். அமெரிக்க அதிபர் வெளிநாடுகள் மீது விதிக்கும் கூடுதல் வரிகள் காரணமாக உள்நாட்டு மக்கள்தான் அதிகம் சிரமப்படுகிறார்கள். புரிகிற மாதிரி சொல்வது என்றால்..இந்த கூடுதல் வரியை பொதுவாக வரி விதிக்கப்பட்ட நாடுகள் செலுத்தாது. மாறாக அமெரிக்க குடிமக்கள்தான் செலுத்த வேண்டும்.

கனடாவில் ஒரு அமெரிக்கா அரிசி வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கான வரி இப்போது 25% உயர்ந்துவிட்டது. இதை இறக்குமதி செய்து விற்பது ஒரு அமெரிக்க டீலராகவே இருப்பார். அவர் அமெரிக்காவில் கூடுதல் இறக்குமதி வரியை கட்ட வேண்டும். இந்த கூடுதல் செலவை ஈடுகட்ட அவர் விற்பனை விலையை அதிகரிப்பார். இதனால் பொருட்களின் விலை உயரும். வரி விதிக்கப்படும் நாடுகள் இதனால் எப்படி நேரடியாக பாதிக்கப்படும் என்ற கேள்வி எழலாம். நேரடியாக வரி விதிக்கப்படும் நாடுகள் இதனால் பாதிக்காது.

India Pakistan ceasefire at very risk due to US court bans says Donald Trump side in hearing

கூடுதல் வரியால் வரி விதிக்கப்படும் நாடுகளின் பொருட்களை வாங்க டீலர்கள் யோசிப்பார்கள். அதனால் அதன் மவுசு குறையும். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட போவது அதை இறக்குமதி செய்யும் அமெரிக்கர்கள்தான். அவர்கள்தான் கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்கும். அதிலும் சீனாவின் சில பொருட்கள் இல்லாமல் அமெரிக்காவில் வியாபாரமே நடக்காது. அதை எப்படி இருந்தாலும் அமெரிக்க டீலர்ஸ் அதிக வரி தந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும். இதைத்தான் சொந்த செலவில்.. சூனியம் வைத்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப் என்று அமெரிக்கர்கள் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.

வழக்கு

இதை எதிர்த்தே அமெரிக்காவின் சிறுதொழில் வர்த்தகர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்திற்கான நீதிமன்றத்தில் அதிபர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குகள் நடந்து வருகின்றன. International Emergency Economic Powers Act (IEEPA) என்ற சட்டத்திற்கு எதிராக வழக்குகள் நடந்து வருகின்றன. அவர் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார், இதை பயன்படுத்த சட்டப்படி டிரம்பிற்கு அதிகாரம் இல்லை, மாநில கவர்னர்களுக்கே அதிகாரம் உள்ளது என்று வாதங்களை வைத்தனர்.

இதற்கு அதிபர் டிரம்ப் தரப்பு வைத்த பதில் வாதத்தில், இந்த சட்டத்தை பயன்படுத்துவதன் மூலமே அமெரிக்காவிற்கு மீண்டும் தொழிற்சாலைகள் வரும். அமெரிக்காவிற்கு நிறுவனங்கள் வரும். அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் குறையும்.

அதோடு இந்த சட்டத்தை பயன்படுத்தியே இந்தியா - பாகிஸ்தானுக்கு நாங்கள் நெருக்கடி கொடுத்தோம். அவர்கள் மீது வரி போடுவோம் என்று நெருக்கடி கொடுத்தோம். அதை பயன்படுத்தி போரை நிறுத்தினோம். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சட்டத்தின் அதிகாரங்களை டிரம்ப் கையில் இருந்து நீங்கள் எடுத்தால் பாகிஸ்தான் இந்தியா போர் மீண்டும் வெடிக்கலாம். அதோடு இல்லாமல்.. இரண்டு அணு ஆயுத நாடுகளின் மோதலுக்கு அது காரணமாக அமைந்து விடும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

என்ன கூறினார்?

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என்று கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+