"இதுதான் தேசிய கொடியின் கம்பீரமா?" அரசு விற்கும் தேசிய கொடியின் நிலை அதிர்ச்சி.. வெடிக்கும் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுக்க கோலாகல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தபால் துறை சார்பில் விற்கப்படும் தேசிய கொடிகள் மிக மோசமான தரத்தில் இருப்பதாகவும் யாருமே பயன்படுத்த முடியாத நிலையில் கம்பீரம் குறைந்து இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது அனைவருக்கும் தெரியும். நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவுகூரவும் சுதந்திரத்தை கொண்டாடவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதியை நாம் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறோம். அதன்படி நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

India Post National Flag

தபால் துறை

இதை மிக சிறப்பாக கொண்டாட நாடு முழுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் பிரதமர் மோடியும், சென்னையில் முதல்வர் விஜய்யும் தேசிய கொடியை ஏற்றுகிறார்கள். இதற்கிடையே தபால் துறை சார்பிலும் விற்கப்படும் தேசிய கொடி மிக மோசமாகவும் கம்பீரம் குறைந்தும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அனைவருக்கும் 80வது சுதந்தர தின நல்வாழ்த்துக்கள். எனக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வார இதழ் வருவது வழக்கம். இன்று அந்த வார இதழை கொடுக்க வந்த சகோதரி, சுதந்திர தினத்திற்கு கொடியை விற்பனை செய்வதாகவும் அதன் விலை ரூ.25 மட்டுமே என்றும் கூறினார். மேலும், தனக்கு டார்கெட் இருப்பதால் வாங்கிக் கொள்கிறீர்களா என கேட்டார்.

கம்பீரத்திற்கு முரணாக

நானும் நாட்டு பற்றுடன் அந்த கொடியை வாங்கினேன். வாங்கிய எனக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய தபால் துறை இந்த தேசிய கொடிக்கான காண்டிராக்ட்டை வெளியிட்டு இருக்கிறது. அதே ஒரு தையல்காரர் தைத்திருக்கிறார். அந்த கொடி 25 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. கொடியை குச்சியில் செருக வேண்டிய தையல் பிரிந்து இருக்கிறது. கொடியின் மறுபுறம் தேசிய கொடியின் கம்பீரத்திற்கு முரண்பாடாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா ஒரு பெரிய நாடு...நல்ல முதல்வர், நல்ல பிரதமர், கேள்வி கேட்பவருக்கு கரப்பான் பூச்சி கொண்ட அமைப்புகள் இருந்தாலும் தனி மனிதர்கள் நாட்டுப்பற்றோடு கொடியை தயார் செய்து வெளியிட தவறிவிட்டனர். இதை வாங்கிய எனக்கு பெரும் அதிர்ச்சி! காசு கொடுத்து கொடியை வாங்கும்போது நான் ஒரு நுகர்வோர் ஆகிவிடுகிறேன். அரசு அதை விற்கும் அமைப்பாக மாறிவிடுகிறது. அப்படியிருக்கும்போது போதிய தரம் இல்லாத கொடியை விற்கப்படுவதை நான் எங்கு போய் முறையிடுவது?

நாட்டு பற்று வேண்டும்

இதை விற்கும் முன் சரிபார்த்தவர்கள் என்ன கவனத்தில் அதை சரிபார்த்தார்கள்.. இந்திய தபால் துறை வெளியிட்ட கொடி கண்ணின் ஒற்றிக் கொள்வது போல புனிதமாக இருக்க வேண்டும். ஜப்பான், சிங்கப்பூர் போல இந்தியா ஒரு கம்பீரமான நாடாக வர வேண்டும் என்பதே அனைத்து மக்களின் ஆசை. ஆனால், ஆட்சியாளர்கள் சரியாக இருந்தாலும், தனி மனிதர்கள் நாட்டு பற்று இல்லாமல் ஒரு கொடியை தயார் செய்து வெளியிடுவது, நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது. நாளை 80வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் நிலையில், தபால் துறை வெளியிட்ட தேசிய கொடி இப்படி இருக்கிறது" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+