Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலேயே மிக அதிக பணவீக்கம்.. வெள்ளிக்குத்தான்.. எல்லா பொருட்களையும் ஓவர் டேக் செஞ்சிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஜனவரி மாதத்திற்கான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 2.75 சதவீதமாக பதிவாகியுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டெண்ணின் (CPI) அடிப்படை ஆண்டை 2024-க்கு மாற்றிய பிறகு, அதன் முதல் தரவுகளை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நேற்று வெளியிட்டது. வெள்ளிக்குத்தான் அதிக அளவில் பணவீக்கம் இருப்பதாக இதில் கூறப்பட்டு உள்ளது இந்த புதிய டேட்டா நாட்டின் பொருளாதார நிலையை மிகவும் துல்லியமாக பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் பணவீக்கம் 2.73 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 2.77 சதவீதமாகவும் உள்ளது. 2024-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய குறியீட்டு அளவு ஜனவரி 2026-ல் 104.46 ஆக உள்ளது. இது கடந்த 2025 ஜனவரியில் 101.67 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

gold rate silver investment

பழைய 2012 அடிப்படை ஆண்டின்படி, 2025 ஜனவரியில் பணவீக்கம் 4.26 சதவீதமாகவும், 2025 டிசம்பரில் 1.33 சதவீதமாகவும் இருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம், பணவீக்கத்தைக் கணக்கிடும் பொருட்களின் எண்ணிக்கை 259-லிருந்து 308 ஆகவும், சேவைகளின் எண்ணிக்கை 40-லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பணவீக்கம் எவ்வளவு?

மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, ஓடிடி (OTT) சந்தாக்கள், சிஎன்ஜி (CNG) எரிபொருள், குழந்தை பராமரிப்பு சேவைகள் (Babysitter) போன்ற நவீன காலச் செலவுகள் இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயம், விசிஆர் (VCR), ரேடியோ, சிடி (CD) போன்ற பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 2.13 சதவீதமாக உள்ளது. இதில் நகர்ப்புறங்களில் 2.44 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 1.96 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. வீட்டு வசதிக்கான பணவீக்கம் 2.05 சதவீதத்தை எட்டியுள்ளது. மாநில வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களில், தெலுங்கானா 4.92 சதவீதத்துடன் அதிகபட்ச பணவீக்கத்தைக் கொண்டுள்ளது. கேரளா (3.67%), தமிழ்நாடு (3.36%), ராஜஸ்தான் (3.17%) மற்றும் கர்நாடகா (2.99%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

வெள்ளி ஆபரணங்களின் விலை பணவீக்கம்

பொருட்களின் அடிப்படையில் பார்த்தால், வெள்ளி ஆபரணங்களின் விலை 159.67 சதவீதம் உயர்ந்து உச்சத்தில் உள்ளது. வெள்ளிக்குத்தான் அதிக அளவில் பணவீக்கம் இருப்பதாக இதில் கூறப்பட்டு உள்ளது. தக்காளி (64.80%), தேங்காய் பருப்பு (47.18%), தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் (46.77%) ஆகியவையும் கணிசமான விலை உயர்வைச் சந்தித்துள்ளன. மறுபுறம், பூண்டு விலை 53.05 சதவீதம் குறைந்து நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வெங்காயம் (29.27%), உருளைக்கிழங்கு (28.98%) மற்றும் துவரம் பருப்பு (24.90%) ஆகியவற்றின் விலைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

பழைய முறையில் உணவுப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் (Weightage) கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் வருமானம் உயரும்போது உணவைத் தவிர மற்ற நவீன தேவைகளுக்கும் அதிகம் செலவிடுகிறார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. புதிய முறையில் உணவு மற்றும் பானங்களுக்கான பங்கு 36.75% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், இனி தக்காளியோ அல்லது பருப்போ விலை ஏறினால், அது ஒட்டுமொத்த பணவீக்கத்தை பழைய அளவுக்குப் பெரியதாகப் பாதிக்காது.

புதிய பணவீக்க வரிசை குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "இந்த புதிய தரவுகள் தற்போதைய சூழலில் வட்டி விகிதக் கொள்கைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே கருதுகிறோம். அமெரிக்க-இந்திய வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் சீராக இருப்பதால், வட்டி விகிதங்களில் தற்போதைய நிலையே நீடிக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

புதிய நுகர்வோர் விலை குறியீட்டு கூடையில் (Basket) உணவு மற்றும் பானங்களுக்கு 36.75 சதவீதமும், வீட்டு வசதி மற்றும் எரிபொருளுக்கு 17.67 சதவீதமும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, கல்வி மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளுக்கான பங்களிப்பும் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு இந்தியாவின் பொருளாதார நிலையை உலகத் தரத்திற்கு இணையாகவும், எதார்த்தமான முறையிலும் கணக்கிட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+