"பிரஸ் நோட் 3".. இந்தியா கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. சீனாவுடன் கரம்கோர்த்த மோடி.. தரமான மூவ்
சென்னை: இந்தியா - சீனா இடையிலான உறவு கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட தொடங்கி உள்ளது. அமெரிக்க எதிர்ப்பு என்ற புள்ளியில் இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளும் ஒன்றாக கரம் கோர்க்க தொடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீனாவிலிருந்து வரும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கான (FDI) சில கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்த வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரஸ் நோட் 3 விதி நீக்கம்
கடந்த மாதம், மத்திய அரசின் முதன்மை கொள்கை வகுக்கும் அமைப்பான நிதி ஆயோக் இது தொடர்பாக சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இப்போது சீனாவிலிருந்து 24% வரை நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு (FDI) முன்கூட்டிய அனுமதி கட்டாயம் என்ற விதி உள்ளது. இதை 'பிரஸ் நோட் 3' விதி என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் நிதி ஆயோக் இந்த 'பிரஸ் நோட் 3' நிபந்தனையை நீக்குமாறு பரிந்துரைத்திருந்தது.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் வலுப்பெற்றுள்ளன. சமீபத்தில்தான் இரண்டு நாடுகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வ நேரடி விமான சேவைகளைத் தொடங்க டெல்லியும் பெய்ஜிங்கும் ஒப்புதல் அளித்தது. சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது, மற்றும் எல்லைத் தகராறுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் இரண்டு நாடுகளும் மேற்கொண்டு வருகிறது.
'பிரஸ் நோட் 3' என்றால் என்ன?
இந்தியாவின் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அரசின் முன்கூட்டிய அனுமதி கட்டாயம் என்ற நிபந்தனையைத்தான் 'பிரஸ் நோட் 3' என்று கூறுவார்கள்.
'பிரஸ் நோட் 3' என்று விதியின் மூலம் நேபாளம், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவின் முன்கூட்டிய அரசு அனுமதி கட்டாயம். இதனால் அண்டை நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யாமல் வெறுமனே இந்திய மார்க்கெட்டை மட்டும் பயன்படுத்திக்கொள்வதை தடுக்கும். சாலை மார்க்கமாக அதிக பொருட்களை கொண்டு வருவதை குறைக்கும் விதமாக இந்த 'பிரஸ் நோட் 3' கொண்டு வரப்பட்டது.
சீனா அரிய வகை காந்தங்களை விநியோகிக்க ஒப்புதல்
சமீபத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யின் இந்திய வருகைக்குப் பிறகு, அரிய வகை காந்தங்கள் மற்றும் உரங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு சீனா கடந்த வாரம் ஒப்புக்கொண்டது. இந்த மாதம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெய்ஜிங்குக்குச் சென்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார். இரு நாடுகளும் உறவுகளை மறுசீரமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் செல்லவுள்ளார். இது அவரது ஏழு ஆண்டுகளில் முதல் சீனப் பயணம் ஆகும். இந்த மாநாட்டின் ஓரத்தில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திப்பார். இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.
தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை வாங் யி, மோடியிடம் வழங்கினார். 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, ராணுவ மற்றும் ராஜதந்திர விவாதங்களை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications