அணு ஆயுத சோதனை செய்த போது கூட இப்படி ஆகவில்லையே.. பாதாளத்திற்கு போன இந்தியா - அமெரிக்கா உறவு!
சென்னை: இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. இந்திய வரலாற்றில் மிக கடுமையான நிலையை இரண்டு நாட்டு உறவு அடைந்து உள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்குவதுடன், வாங்கப்பட்ட எண்ணெயின் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் கொல்லப்படும் மக்கள் குறித்து இந்தியர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்.. ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கி அதை மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறது" என்று எச்சரித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவை இருநாட்டு உறவு எட்டி உள்ளது.
இந்தியா அணு ஆயுத சோதனை
இந்தியா அணு ஆயுத சோதனை செய்த போது இந்திரா காந்தி காலத்தில் இந்தியா மீது கடுமையான பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா விதித்தது. ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவின் ராஜதந்திரம் காரணமாக இந்தியாவிற்காக அமெரிக்கா இறங்கி வந்தது. அமெரிக்கா தனது அணு ஆயுத கொள்கைகளை கூட மொத்தமாக மாற்றி, சட்டத்தையே மாற்றி இந்தியாவிற்காக இறங்கி வந்தது.
ஆனால் இப்போது அதே அமெரிக்கா - இந்தியா உறவு மிக மோசமாக சரிந்து உள்ளது. இந்த உறவு தேவைப்படும் மிக அவசியமான காலத்தில்.. டிரம்ப் இதை உடைத்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக டிரம்ப் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
டிரம்ப் இந்தியா வரி
முன்னதாக டிரம்ப் செய்த போஸ்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நட்பு இருந்தாலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தக தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறைவாகவே உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மேலும், இந்தியா தனது ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடமிருந்தே வாங்குகிறது. சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் எரிசக்தி வாடிக்கையாளர்களில் இந்தியாவும் முன்னணி வகிக்கிறது. உக்ரைனில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் விரும்புகின்றன. ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தேதியிலிருந்து இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும். இது மேற்கூறிய காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராதமாகும்., என்று டிரம்ப் இந்தியாவை கடுமையாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அமெரிக்கா மோதல்
இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானுடன் ஒரு புதிய வர்த்தக உடன்படிக்கையை அறிவித்தார். இந்தியப் பொருட்களின் மீது 25% வரி விதித்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்த டிரம்ப்.. பாகிஸ்தான் உடன் ஒப்பந்தம் செய்தது மட்டுமன்றி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் கூட தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு - டொனால்ட் டிரம்ப்
பாகிஸ்தான் உடன் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த ஒப்பந்தம் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை கூட்டாக ஆராய்ந்து மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இது கொண்டு வரக்கூடும் என்று டிரம்ப் அவரின் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்தார். அதாவது பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை எடுத்து அதை உலக நாடுகளுக்கு விற்க அமெரிக்கா உதவும்.. அந்த எண்ணெயை இந்தியா கூட வாங்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் - இந்தியா சண்டை உச்சம்
அமெரிக்காவும், பாகிஸ்தானும் இந்த திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் புதிய எரிசக்தி நிறுவனத்தை உருவாக்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இது குறித்து டிரம்ப் மேலும் கூறியதாவது, "பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து எண்ணெய் வளங்களை மேம்படுத்தும். இந்த கூட்டுக்கு தலைமை தாங்க ஒரு எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருக்கிறோம். ஒருவேளை பாகிஸ்தான் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா - இந்தியா உறவு மிக மோசமாக சரிந்து உள்ளது.இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக டிரம்ப் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இதை கட்டுப்படுத்த வேண்டிய சரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தள்ளப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications