6வது இடத்திற்கு சரிந்த இந்திய பொருளாதாரம்.. தூக்கி சாப்பிட்ட பிரிட்டன்! IMF ஷாக் ரிப்போர்ட்
சென்னை: சர்வதேச நிதியத்தின் (IMF) சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 5வது இடத்தில் இருந்த இந்தியா 6வது இடத்திற்கு சரிந்திருக்கிறது. அதேபோல 6வது இடத்தில் இருந்த பிரிட்டன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியா 5-ஆவது இடத்திலிருந்து 6-ஆவது இடத்திற்குச் சென்றதற்கும், பிரிட்டன் முன்னேறியதற்கும் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

என்ன காரணம்?
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது உள்நாட்டு ரூபாய் மதிப்பில் ஆரோக்கியமாக இருந்தாலும், சர்வதேச தரவரிசை அமெரிக்க டாலர் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84-லிருந்து 92-க்குச் செல்லும்போது, டாலர் மதிப்பில் கணக்கிடப்படும் இந்தியாவின் மொத்தப் பொருளாதாரம் சுருங்கிக் காட்டுகிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு வலுவடைந்துள்ளதால், டாலர் அடிப்படையில் அவர்களின் ஜிடிபி மதிப்பு உயர்ந்திருக்கிறது.
பிரிட்டனின் வளர்ச்சி
இந்தியா கடந்த 2024ல், 3.76 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஜிடிபிஐ கொண்டிருந்தது. இந்த காலத்தில் பிரிட்டனின் ஜிடிபி 3.70 டிரில்லியன் டாரலர்கள்தான் இதுவே 2025ல், இந்தியா 3.92 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஜிடிபிஐ கொண்டிருந்தது. ஆனால், பிரிட்டனின் ஜிடிபி 4 டிரில்லியன் டாரலர்களாக உயர்ந்திருக்கிறது.
தற்காலிக பின்னடைவுதான்
மத்திய அரசு ஜிடிபி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை 2011-12 லிருந்து 2022-23 ஆக மாற்றியமைத்துள்ளது. இது தற்போதைய நுகர்வு முறை மற்றும் தொழில் மாற்றங்களைப் பிரதிபலிக்க உதவும் என்றாலும், ஆரம்பகட்ட மாற்றங்களின் போது புள்ளிவிவர ரீதியான சில ஏற்ற இறக்கங்களை உருவாக்குவது இயல்பானதே.
எதிர்கால பிளான்
அதேபோல, தற்காலிகமாக இந்தியா 6-ஆவது இடத்தில் இருந்தாலும், IMF மற்றும் பொருளாதார வல்லுநர்களின் கணிப்புகள் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி மீது நம்பிக்கையைத் தருகின்றன. அதாவது அடுத்த ஆண்டு இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டில் இந்தியா பிரிட்டனை மட்டுமல்லாமல், நீண்ட காலமாகப் பொருளாதாரத் தேக்கத்தைச் சந்தித்து வரும் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி 4-ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது பெரிய பொருளாதாரம்
இந்தியாவின் தற்போதைய ஆண்டு வளர்ச்சி விகிதம் (Real GDP Growth) 6% முதல் 7% வரை நீடிக்கும் பட்சத்தில், 2031-ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications