ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்
சென்னை: ஈரானின் 'ஷாஹெத்-136' (Shahed-136) தற்கொலைப்படை ட்ரோன்கள் இன்று உலக நாடுகளை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. மிகக்குறைந்த செலவில் எதிரி நாட்டுப் பதுங்கு குழிகளையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரேடார்களையும் துவம்சம் செய்கிறது இந்தத் தொழில்நுட்பம். அமெரிக்காவே இந்த 'லோ-காஸ்ட்' ஃபார்முலாவைக் கண்டு வியந்து 'லூகாஸ்' (LUCAS) ரக ட்ரோன்களைக் களமிறக்கியுள்ள நிலையில், இந்தியா தனது சொந்தப் பதிலடியைத் தயார் செய்துவிட்டது. அதுதான் 'சேஷ்நாக்-150' (Sheshnaag-150).
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட 'நியூஸ்பேஸ் ரிசர்ச் டெக்னாலஜிஸ்' (NRT) நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த டிரோன், தற்போது இறுதிக்கட்டச் சோதனைகளில் வேகம் எடுத்துள்ளது.

ஆபரேஷன் சிந்துார் கொடுத்த அலர்ட்!
கடந்த 'ஆபரேஷன் சிந்துார்' போரின்போது, இந்திய ராணுவம் NRT நிறுவனத்தின் ட்ரோன் சேவைகளைப் பயன்படுத்தியது. அப்போதுதான் ஒன்று புரிந்தது: வெறும் ஏவுகணைகளை மட்டும் நம்பியிருக்காமல், வெட்டுக்கிளி போலகூட்டமாக வந்து தாக்கும் 'ஸ்வார்ம் ட்ரோன்' (Swarm Drone) வசதி நமக்கு எவ்வளவு அவசியம் என்பது!
ஈரானின் ஷாஹெத் ட்ரோன்கள் மலிவானவை; ஆனால், அவை கொடுக்கும் தாக்கம் மரண பயத்தைக் காட்டக்கூடியவை. அதே பாணியில் உருவானதுதான் இந்த சேஷ்நாக். எதிரியின் வான் பாதுகாப்பு மண்டலத்தை (Air Defense) மொத்தமாகச் செயலிழக்கச் செய்து, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வித்தையை இது கற்றுக்கொண்டுள்ளது.
சேஷ்நாக் - 150: சிறப்பம்சங்கள் என்ன?
வேட்டை தூரம்: 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கவல்லது.
தாக்குப்பிடிக்கும் திறன்: தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்டு (Loitering) எதிரியைக் கண்காணிக்க முடியும்.
வெடிமருந்து: 25 முதல் 40 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து சென்று, டாங்கிகள் அல்லது ராணுவத் தளங்களைச் சுக்குநூறாக்க வல்லது.
சுயபுத்தி: மனிதக் குறுக்கீடு இன்றி, தானாகவே இலக்குகளைக் கண்டறிந்து தாக்கும் 'ஆட்டோனோமஸ்' வசதி கொண்டது.
அந்த 'சீக்ரெட் சாஸ்'!
விமானத்தை உருவாக்குவது பெரிய விஷயமல்ல; ஆனால், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டு, ஒரு ராணுவக் கட்டுக்கோப்புடன் தாக்குதல் நடத்துவதற்கான 'அல்காரிதம்' (Algorithm) தான் இதன் பலம்.
அமெரிக்காவின் லூகாஸ் ட்ரோன்கள் எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' உதவியுடன் இயங்குகின்றன. ஆனால், இந்தியா ஒருபடி மேலே போய், ஜி.பி.எஸ் (GPS) சிக்னலே இல்லாத இடங்களிலும், கேமராக்கள் மூலம் பாதையைக் கண்டறிந்து செல்லும் 'விஷுவல் நேவிகேஷன்' (Visual Navigation) முறையை இதில் புகுத்தியுள்ளது.
ட்ரோன் போர்: வருங்காலத்தின் முகம்!
ஆபரேஷன் சிந்துாரின் போது பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான மலிவான ட்ரோன்களைப் பறக்கவிட்டது. அவற்றின் நோக்கம் தாக்குவது மட்டுமல்ல, இந்திய ராணுவத்தின் விலை உயர்ந்த ஏவுகணைகளைத் தேவையில்லாமல் செலவு செய்ய வைப்பதும், நமது நிலைகளைத் தெரிந்துகொள்வதும்தான். ஆனால், இந்தியா மிகக் குறைந்த எண்ணிக்கையிலான, ஆனால் அதிநவீனத் தாக்குதல் ட்ரோன்களைக் கொண்டு பாகிஸ்தானின் ரேடார்களை முடக்கியது.
உக்ரைன் போர் முதல் ஆபரேஷன் எபிக் ஃபியூரி (Epic Fury) வரை உலகம் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்: இனி யுத்தம் என்பது விலையுயர்ந்த போர் விமானங்களால் மட்டுமல்ல, இது போன்ற 'குறைந்த விலை' ட்ரோன்களால்தான் தீர்மானிக்கப்படும். அந்தப் போருக்கு இந்தியா இப்போது 'சேஷ்நாக்' மூலம் தயாராகிவிட்டது!
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications