இந்தியன் 2 விபத்து.. கமல்ஹாசனுக்கு சம்மன்.. நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு!
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்க நடிகர் கமலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.
இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் இந்த விபத்தில் காயம் அடைந்தோர், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தற்போது இந்த விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்னிலையில் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார் . ஷங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து நடிகர் கமலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள் சென்னை வேப்பரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications