வங்கி கணக்கு இருக்கா? இந்தியன் வங்கி அக்கவுண்ட் இருக்கா? நம்பரை நோட் பண்ணுங்க.. பணம் எடுக்க தெரியுமா
சென்னை: இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? வங்கியிலிருந்து எப்படி பணம் எடுக்க வேண்டும் தெரியுமா? இந்த எளிய முறையை பாருங்க:
இந்தியன் வங்கியை பொறுத்தவரை, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான சேவையை முழுமையாக தந்து வருகிறது. இந்தியன் வங்கியில், வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதம் முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது.

கணக்கு: எப்போதுமே, வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், ஒருவரின் கணக்கு இருப்பை சரிபார்த்து கொள்வது கட்டாயம். இது வாடிக்கையாளரின் நிதியை கண்காணிக்கவும், அவர்கள் இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளார்கள் என்பதை அறியவும், அவர்களின் கணக்கில் இன்னும் எவ்வளவு பணம் மீதிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள உதவும்.
அதுமட்டுமல்ல, இதன்மூலம், மோசடி நடவடிக்கையையும் கண்காணிக்கலாம். கணக்கிலிருந்து டெபிட் செய்யப்பட்ட பணத்தை கண்டறியவும் இது உதவுகிறது.
என்ன செய்ய வேண்டும்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர் தங்களுடைய இருப்பை தெரிந்து கொள்ள, 8108781085 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மிஸ்டு கால் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று உங்களுக்கு ஒரு SMS வரும்... அதுபோலவே, இந்தியன் வங்கி வாடிக்கையாளர் பராமரிப்பு துறையை தொடர்பு கொள்ள 1800 4250 0000 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
அதேபோல, வங்கி கணக்கு இருந்தாலும், சிலருக்கு வங்கிக்கு நேரடியாக சென்று எப்படி பணம் எடுப்பது என்பது தெரியாது.. கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி, பணம் எடுக்கலாம்.
- அனைத்து வங்கியிலும் ஆங்கில முறையில்தான் செல்லான் இருக்கும். ஆனால், இந்தியன் வங்கியில் மட்டும்தான் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் என 2 மொழிகளிலுமே இருக்கும்..
- முதலில் DATE என்ற இடத்தில, பணம் என்ன தேதியில் எடுக்கிறீர்களோ, அதனை நிரப்பி கொள்ள வேண்டும்
- பிறகு Pay of Self/Us The Sum Of என்பதில் நீங்கள் எடுக்கும் பணத்தின் பெயரை எழுத்தால் எழுத வேண்டும்
- எழுத்தால் எழுதியதுபோல் இந்த கட்டத்தில் எண்களாலும் எழுத வேண்டும் (உதாரணத்துக்கு, 2000 பணம் எடுக்கிறீர்கள் என்றால், அதனை இரண்டாயிரம் மட்டும் என்று எழுத வேண்டும் ஆங்கிலத்தில் எழுதினால், Two Thousand Rupees Only என்று எழுத வேண்டும்
- 16 கட்டம் தரப்பட்டிருக்கும். இதில், உங்களுடைய இந்தியன் வங்கி கணக்கு எண்களை, அடித்தல் திருத்தலில்லாமல் தெளிவாக எழுத வேண்டும்
- Sig of A/C Hoder என்ற இடத்தில் யாருடைய பெயரில் வங்கி கணக்கு இருக்கிறதோ அவர்கள் கையொப்பம் இட வேண்டும்
- கையொப்பம் என்ற இடத்தில், வங்கியில் எப்படி கையொப்பம் இடப்பட்டுள்ளதோ, அதனை போலவே கையெழுத்து போடுவது அவசியம். ,இல்லாவிட்டால், உங்களுடைய படிவத்தினை ஏற்க மாட்டார்கள்
- கையெழுத்து பக்கத்திலேயே, யாருடைய வங்கி கணக்கு என்பதை அவர்களுடைய பெயரையும் எழுத வேண்டும்
- அதற்கு பிறகு தரப்பட்டிருக்கும் எதையும் விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக Signature of Paying Official என்ற இடத்தில் கையெழுத்தை போட்டால் போதும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications