"அவமானம்.. உங்களுக்கு அந்த தகுதியே இல்லை".. அஸ்வினை சீண்டி அசிங்கப்பட்ட ஜாம்பவான்.. இது தேவையா?
சென்னை: அஸ்வின் குறித்து விமர்சனம் செய்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவிற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
டெல்லி அணியில் ஆடும் அஸ்வினுக்கும் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கும் கடந்த போட்டியில் மோதல் ஏற்பட்டது. கடந்த போட்டியில் அஸ்வினும் பண்டும் பேட்டிங் செய்யும் போது இந்த சம்பவம் நடந்தது. கொல்கத்தா வீரர் திரிப்பாதி வீசிய பந்து பண்ட் உடையில் பட்டு ஓவர் த்ரோ சென்றது. இதற்கு அஸ்வின் ரன் ஓடியதால், இயான் மோர்கன் கோபம் அடைந்தார்.
உடையில் பட்டு செல்லும் ஓவர் த்ரோவிற்கு ரன் ஓடுவது தவறு என்று அஸ்வினை மோர்கன் விமர்சனம் செய்தார். இதற்கு அஸ்வின் கடுமையாக கோபம் அடைய இருவருக்கும் இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அஸ்வினின் கோபத்தை இணையத்தில் பலரும் விமர்சனம் செய்து இருந்தனர்.

அஸ்வின் வார்னே
இந்த நிலையில் அஸ்வினின் இந்த கோபம் குறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே விமர்சனம் செய்து இருந்தார். அதில் அஸ்வின் குறித்தும் இந்த மோதல் குறித்தும் இருவேறுபட்ட கருத்துக்கு வாய்ப்பே இல்லை. இது மிகவும் சிம்பிள் விஷயம்.. இது அவமானகரமான விஷயம், இது மீண்டும் நடக்க கூடாது. அஸ்வின் மீண்டும் "அப்படி" ஒரு நபராக இருக்கவே கூடாது. இயான் மோர்கனுக்கு கோபப்பட வேண்டிய எல்லா உரிமையும் உள்ளது என்று வார்னே குறிப்பிட்டு இருக்கிறார்.

வார்னே விமர்சனம்
அதாவது அஸ்வின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இன்றி நடந்து கொண்டு இருப்பதாக வார்னே விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே அஸ்வின் மன்கட் சர்ச்சையில் சிக்கியதை மறைமுகமாக குறிப்பிட்டு அஸ்வினை வார்னே விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில்தான் வார்னேவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் பதிலடி கொடுத்துள்ளனர். வார்னே பொதுவாக மைதானத்தில் மற்ற வீரர்களிடம் பண்பாக நடந்து கொள்ளும் வீரர் கிடையாது.

கடும் விமர்சனம்
எதிரணி நாட்டு வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். மைதானத்தில் கடுமையாக சண்டை போட கூடியவர். இந்தியாவின் சேவாக், சச்சின், கங்குலி போன்ற வீரர்களிடம் வார்னே கடுமையான சண்டை போட்டு இருக்கிறார். சில வீரர்களிடம் நிற வெறி ரீதியாக மேற்கு இந்திய தீவுகளின் போட்டிகளில் பேசி இருக்கிறார். இதெல்லாம் போக பிக்பாஷ் லீக் போட்டிகளில் கூட வார்னே இதேபோல் மிக கடுமையாக சக வீரர்களிடம் மோசமாக பேசி இருக்கிறார்.

இந்தியர்கள் பதிலடி
இதனால்தான் தற்போது வார்னேவை இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். கிரிக்கெட் ஸ்பிரிட் பற்றி நீங்கள் பாடம் எடுக்கலாமா. களத்தில் சரியாக நடந்து கொள்வது குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நீங்கள் எத்தனை முறை பிறரை பற்றி தவறாக பேசி உள்ளீர்கள். நீங்கள் களத்தில் பலமுறை மோசமாக நடந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் அஸ்வினுக்கு பாடம் எடுப்பது சரியா? என்று கேட்டு உள்ளனர்.

தடை
அதேபோல் வார்னே சில முறை எதிரணி வீரர்களை மோசமாக நடத்தி சர்ச்சையில் இருக்கிறார். இதற்காக சில போட்டிகளில் ஆட தடையும் பெற்று இருக்கிறார். உலகத்திலேயே ஆஸ்திரேலிய வீரர்கள்தான் மோசமாக ஸ்லெட்ஜ் செய்வார்கள். எதிரணி வீரர்களை மோசமாக நடத்துவார்கள். அப்படி ஒரு அணியில் இருந்து வந்து விட்டு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று வார்னேவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications