‛தமிழ்நாடு' பெயர் எங்க? TNSTC பஸ்சில் இடம்பெறாத வார்த்தை.. ஸ்டாலினுக்கு பறந்த புகார்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டிஎன்எஸ்டிசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சேலம் டெப்போவை சேர்ந்த பஸ்சில் ‛தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - சேலம்' என்பதற்கு பதில் ‛அரசு போக்குவரத்து கழகம் - சேலம்' என்று குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் பறந்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டிஎன்எஸ்டிசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் இயங்கி வருகிறது.

இந்த பஸ்களில் சம்பந்தப்பட்ட டெப்போவின் பெயருடன் ‛‛தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்'' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்போது டிஎன்எஸ்டிசி பஸ்களில் தமிழ்நாடு என்பது இடம்பெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சேலம் டெப்போவை சேர்ந்த அரசு பஸ்சில் ‛தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - சேலம்' என்பதற்கு பதில் ‛அரசு போக்குவரத்து கழகம் - சேலம்' என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் திட்டமிட்டே ‛தமிழ்நாடு' என்ற வார்த்தை இடம்பெறவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களிலும்,பெயர் பதாகைகளிலும், ‛தமிழ்நாடு அரசு' என்று கண்டிப்பாக எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை எழுதியவரின் பெயர் எம் கருண். இவர் இந்திய பேனா நண்பர் பேரவையின் நிறுவன தலைவராக உள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‛‛ தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ‛தமிழ்நாடு' எனறபெயர ்முறதலிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தங்கள் கவனித்திற்கு வைக்கிறேன். தமி் பகைவர்களால் நாம் சூழப்பட்டிருக்கும் நிலையிலும் நம்மை அடையாளப்படுத்தி நிலைநிறத்த நாம் தயங்குவதில்லை என்பதே நமது தனித்தன்மை.
அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களிலம், பெயர் பதாகைகளிலும் ‛தமிழ்நாடு அரசு' என்று கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்எனஉத்தரவு பிறப்பித்து உடனடியாக அமல்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications