இந்திய ரயிலில் இப்படி கூட நடக்குமா? நான் எதிர்பார்க்கவே இல்லை.. அதிசயத்து போன வெளிநாட்டு பயணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்திய ரயிலில் இப்படி ஒரு உணவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று வெளிநாட்டு பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், "நண்பா, இதுதான் இந்தியாவில் ரயில் உணவின் சிறப்பு, அது வழக்கமாக மிகவும் சுவையாக இருக்கும்" என கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் கடுமையான மக்கள் கூட்டம் காணப்படும்.. தூய்மை இருக்காது.. என்பதே சில வெளிநாட்டவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் தங்கள் நினைத்தது அத்தனையும் தவறு..

Indian Railway Food Surprises Foreign Traveller I Didn t Expect This

இந்திய ரயிலில் வெளிநாட்டு பயணி

இந்தியா நாம் நினைத்து போல இல்லை. அத்தனையும் தலைகீழாக உள்ளது.. என்பதை புரிந்து கொள்கிறார்கள். அதிலும் இங்குள்ள மக்கள் காட்டும் விருந்தோம்பல் வெளிநாட்டு மக்களை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. அடிக்கடி இது குறித்து வெளிநாட்டு பயணிகள் தங்கள் இன்ஸ்டாவில் இது தொடர்பாக பதிவிடும் வீடியோக்கள் வைரல் ஆகி வருவதை பார்க்க முடியும்.

அப்படியான ஒரு வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரல் டிரெண்ட் ஆகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். உலகம் முழுவதும் பயணிக்கும் வெளிநாட்டுப் பயணி ஃப்ரான், இந்திய ரயில் பயணத்தின் அனுபவம் குறித்த ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரயிலில் பரிமாறப்பட்ட சுவையான உணவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது..

இந்தியாவில் ரயில் பயணம் மீதான அபிப்ராயத்தையே முற்றிலும் உணவின் தரம் மற்றும் சுவை மாற்றிவிட்டதாக சிலாகித்து இருக்கிறார். இது தொடர்பான தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஃப்ரான் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

இப்படி ஒரு உணவு கிடைக்குமா

"இந்திய ரயிலில் இப்படி ஒரு உணவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அவர்கள் உணவு பரிமாறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆகையால், நமக்குக் கிடைத்த உணவை ஒரு முறை ஆய்வு செய்யலாம். என்று கூறிக்கொண்டே வழங்கப்பட்ட பார்சல் உணவை திறந்து பார்க்கிறார்.

ஃப்ரான், தனது உணவை அவிழ்த்துப் பார்த்தபோது, சாதம், பருப்பு, பனீர் பட்டர், ரொட்டி, ஊறுகாய், தயிர், ரசமலாய் மற்றும் ஒரு வெந்நீர் துண்டு அடங்கிய மீல்ஸ் இருந்துள்ளது. "இந்திய ரயில் உணவுக்குப் பெரும்பாலும் கெட்ட பெயர் இருந்தாலும், நான் உண்மையில் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த உணவின் அளவு, சரியான சுவை அனைத்தும் என்னை ஆச்சரியப்படுத்தின" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

மேலும் கடைசியாக கேசரியை சுவைத்து பார்த்துவிட்டு மெய்மறந்து போய்விட்டார். இது குறித்த வீடியோ வேகமாக டிரெண்ட் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இது இந்தியா நண்பரே, இங்கு பசியுடன் தூங்க மாட்டீர்கள்" என்று பதிவிட்டார்.

மற்றொருவர், "நண்பா, இதுதான் இந்தியாவில் ரயில் உணவின் சிறப்பு, அது வழக்கமாக மிகவும் சுவையாக இருக்கும்," என்று கூறினார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், ஃப்ரான் சிக்கன் என்று பனீரை கூறினார். அதை சுட்டிக்காட்டி, இது சிக்கன் அல்ல, பனீர். நீங்கள் சாப்பிட்டது ஒரு சைவத் தாலி, இது இந்திய ரயில்களில் பொதுவாகக் கிடைக்கும் உணவு,"என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+