Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டையக் கிளப்புது ரயில்வே.. புக்கிங் + உணவு + ஓடிடி.. ஒரே அப்ளிகேஷனில்! கலக்குது ‘Rail One'.. மாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகள் பலரும் இதுவரை ரயில் முன்பதிவு, தட்கல் டிக்கெட், ரயில் நேர அட்டவணை, உணவு ஆர்டர், புகார் அளித்தல் என பல்வேறு தேவைகளுக்காக பல தனித்தனி செயலிகளைப் பயன்படுத்தி வந்தனர். இப்போது அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், இந்திய ரயில்வே சார்பில் புதிய "ரயில் ஒன் (Rail One)" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் பயணிகளின் வசதிக்காக இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஓடிடியும் இருப்பதால் பயனர்கள் திரைப்படத்தையும் கண்டு ரசிக்க முடியும்.

இந்த "ரயில் ஒன்" செயலியின் மூலம் பயணிகள் முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை அனுமதி சீட்டு, சீசன் டிக்கெட் என அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், எந்த ரயில் எந்த நேரத்தில் வருகிறது, எந்த நிலையங்களில் நிற்கிறது, இரு நகரங்களுக்கு இடையே எந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன போன்ற தகவல்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம். அதோடு, ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் இருந்தபடியே காலை, மதிய, இரவு உணவு ஆர்டர் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

Indian Railways Launches Rail One App

ரயில் ஒன் செயலி

ஆர்-வாலட் (R-Wallet) மூலம் பணம் சேமித்து மின்னணு பரிமாற்றம் செய்யலாம். பயண சீட்டுக்கான பணத்தை திரும்ப பெறுவதும் மிக எளிதாகும். மேலும், "ரயில் மதாத் (Rail Madad)" என்ற பிரிவில் குறைகள், புகார்கள் பதிவுசெய்யலாம். இந்த செயலியில் பயணி தனது பெயர், புகைப்படம் மற்றும் ஆதார் விவரங்களை இணைத்து சீசன் டிக்கெட் பெறலாம். முன்பதிவில்லாத பயணச்சீட்டை பெற, ரயில் நிலையத்திலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உடனடியாக டிக்கெட் பதிவு செய்யலாம். முன்பே பயணிகள் பட்டியலைச் சேமித்து வைத்திருப்பதனால் ஒவ்வொரு முறையும் தகவல் நிரப்ப தேவையில்லை.

ரயில் ஓடிடி

மேலும், காத்திருப்பு டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்பதை நேரடியாக பார்க்கலாம். ரயில் பெட்டியின் துல்லியமான இடத்தையும் காணலாம். இந்த செயலியில் "Go to Waves" என்ற பகுதி வழியாக, இந்திய அரசின் பிரச்சார் பாரதி நிறுவனத்தின் 'Waves OTT' தளத்தில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். இதன் மூலம் ரயில் பயணத்தின் போது நேரத்தை இனிமையாகக் கழிக்க முடியும்.

ரயில் பயன்பாடு

அடுத்த கட்டமாக, இந்த "ரயில் ஒன்" செயலி வழியாக பார்சல் மற்றும் சரக்கு பதிவு செய்வதற்கான வசதிகளும் சேர்க்கப்பட உள்ளன. இதனால் இந்திய ரயில்வே சேவைகள் அனைத்தும் ஒரு டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இந்த செயலியை Google Play Store அல்லது Apple App Store-இல் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ரயில் நேர அட்டவணை

ஏற்கனவே IRCTC அல்லது UTS Mobile பயன்பாட்டில் பதிவு செய்த பயணிகள் தங்களின் பழைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை இதிலும் பயன்படுத்தலாம். மொத்தத்தில், "ரயில் ஒன்" செயலி இந்திய ரயில்வேயின் ஒரு முக்கியமான டிஜிட்டல் முன்னேற்றம். ஒரு செயலி வழியாக டிக்கெட், உணவு, தகவல், பொழுதுபோக்கு என அனைத்தையும் எளிதாகப் பயன்படுத்தலாம் என்பதால் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+