வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்! எத்தனை வரை இருந்தால் கன்பார்ம் ஆகும்? ரயில்வே வெளியிட்ட சீக்ரெட் பார்முலா
சென்னை: ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கன்பார்ம் டிக்கெட்டுகள் ஆவதற்கு என்ன மாதிரியான பார்முலா பின்பற்றப்படுகிறது என்பது பற்றிய தகவலை ரயில்வே பகிர்ந்துள்ளது. எத்தனை டிக்கெட்டுகள் வரை வெயிட்டிங் லிஸ்ட் இருந்தால் எளிதாக கன்பார்ம் டிக்கெட் ஆக கிடைக்க வாய்ப்புள்ளது என்பது பற்றிய தகவலையும் இங்கே பார்க்கலாம்.
ரயில்களில் டிக்கெட் புக் பண்ணும் போது வெயிட்டிங் லிஸ்ட் வந்தால் பயணிகளுக்கு பெரிய தலைவலிதான். சொந்த ஊர்களுக்கு செல்ல புக் செய்து வைத்து இருக்கும் பயணிகள், பயண நாள் வரும் வரையில் டிக்கெட் கன்பார்ம் ஆகிவிட்டதா? என செக் செய்து கொண்டே இருப்பார்கள். கடைசி நேரத்தில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றால் அடித்து பிடித்து பஸ்களில் டிக்கெட் புக் செய்ய வேண்டியிருக்கும்..

ஃபார்முலா என்ன?: டிக்கெட் போடும் போதும், வெயிட்டிங் லிஸ்டில் காண்பிக்கும் போதும், டிக்கெட் புக் செய்தால் கன்பார்ம் ஆகுமா? இல்லையா? என சந்தேகத்தில் பலரும் புக் செய்வார்கள். சில இணையதளங்களில் டிக்கெட் புக் ஆக எத்தனை சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்பதை தோராயமாக வெளியிடுகின்றன. ஆனாலும் இது அப்படியே பலிப்பது இல்லை. ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகும் பார்முலா என்ன என்பதை இந்திய ரயில்வே தற்போது பகிர்ந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
எமெர்ஜென்சி கோட்டா: பண்டிகை நாட்களில் ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரிக்கும். சில நேரங்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் எண்ணிக்கை 500 வரை கூட செல்லும். ஆனால், பண்டிகை போன்ற பீக் நேரங்களில் டிக்கெட்டுகள் கன்பார்ம் ஆவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும். வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை பொறுத்தவரை இரண்டு வழிகளில் கன்பார்ம் ஆகிறது. ஒன்று வழக்கமாக டிக்கெட் கேன்சல் செய்வதால் வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை குறைவது.. மற்றொன்று ரயில்வே எமெர்ஜென்சி கோட்டா..
21 சதவிகிதம் கன்பார்ம் ஆகும்: சராசரியாக 21 சதவிகிதம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பிறகு கேன்சல் செய்கிறார்களாம். இதன் அர்த்தம் என்னவென்றால், 21 சதவிகித வெயிட்டிங் டிக்கெட்டுகள் கன்பார்ம் ஆக வாய்ப்புள்ளது என்பதாகும். உதாரணமாக 72 சீட்கள் கொண்ட ஸ்லீப்பர் கோச்களில் 14 சீட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபோக, டிக்கெட் கன்பார்ம் ஆன பிறகும் 4-5 சதவிகித பயணிகள் பயணம் செய்வது இல்லையாம். இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், 18 டிக்கெட்டுகள் ஒரு கோச்சிற்கு கன்பார்ம் ஆக வாய்ப்புள்ளது.
pool வெயிட்டிங் லிஸ்ட்: 10 கோச்கள் கொண்ட ஒரு ரயில் என்றால், ஒவ்வொரு பெட்டியிலும் 18 சீட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தம் 180 வெயிட்டிங் லிஸ்ட் சீட்கள் கன்பார்ம் ஆக வாய்ப்புள்ளது. இதே விதிமுறைகள்படிதான் ஏசி, செகண்ட் ஏசி, முதல் வகுப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. டிக்கெட் கேன்சல் மட்டும் இன்றி எமெர்ஜென்சி ஒதுக்கீட்டில் உள்ள டிக்கெட்டுகளும் புக் ஆகாமல் போனால் அதுவும் pool வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளில் குறைக்கப்படும்.
5 சதவிகித டிக்கெட்டுகள்: அதாவது, ரயில்வே அமைச்சகம் 10 சதவிகித டிக்கெட்டுகளை அவசர ஒதுக்கீடு டிக்கெட்டாக வைத்து இருக்கும். உடல் நலக்குறைவு மற்றும் அவசியம் செல்வதற்கு தேவைப்படும் பயணிகளுக்காக இந்த கோட்டாவின் கீழ் ஒதுக்கப்படும். 5 சதவிகிதம் மட்டுமே இதில் ரிசர்வ் செய்யப்பட்டால் மீதமுள்ள 5 சதவிகித டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள டிக்கெட்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுவிடுமாம்..












Click it and Unblock the Notifications