ரயில்வேக்கு ரூ.628 கோடி சாதனை.. பழைய இரும்பு விற்பனையில் இவ்வளவு வருமானமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்படாமல் கிடந்த பழைய இரும்புப் பொருட்கள், கணினிகள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றையெல்லாம் அகற்றி ஏலம் விட்டதன் மூலம் ரூ.628.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரயில்வே இந்த வருவாயை ஈட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரயில்வே வளாகங்களில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த இடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்வதென்ன தெரியுமா?

இந்திய ரயில்வேயில் பழைய பொருட்களை அகற்றுவதற்காக அக்டோபர் மாதம் முழுவதும் சிறப்பு தூய்மை முகாம் நடத்தப்பட்டது. . நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், அலுவலகங்கள், பணிமனைகள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Indian Railways

சிறப்பு தூய்மை முகாம்

இதில் பல வருடங்களாகவே பயன்படுத்தப்படாமல் கிடந்த பழைய இரும்புப் பொருட்கள், கணினிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.628.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்த அக்டோபர் மாதத்துக்கு பழைய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கைத் தாண்டி ரூ.628 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு இதேபோன்ற விற்பனை மூலம் ரூ.570 கோடி மட்டுமே கிடைத்திருந்தது.

1.50 லட்சம் சாதனங்கள்

இந்த தூய்மை முகாமில் பழைய இரும்புப் பொருட்களை அகற்றியது மட்டுமின்றி, பயன்படுத்தப்படாமல் இருந்த கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களும் அகற்றப்பட்டுள்ளன.

அந்த வகையில், 1.50 லட்சத்துக்கும் அதிகமான பழைய கணினிகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன. இவற்றை விற்பனை செய்ததன் மூலம் மட்டும் ரூ.10.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

6.20 லட்சம் சதுர அடி இடம்

இதுதவிர, ரயில்வே அலுவலகங்களில் பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமலிருந்த ஃபைல்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழைய பொருட்கள் மற்றும் தேவையில்லாத கழிவுகள் அகற்றப்பட்டதால் ரயில்வே வளாகங்களில் ஏராளமான இடங்கள் காலியாகியுள்ளன. இதன் மூலம் 6.20 லட்சம் சதுர அடி இடம் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 14 ஏக்கர் இடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "நாடு முழுதும் அனைத்து மண்டலங்கள், கோட்டங்கள், ரயில் நிலையங்கள், பணிமனைகள் என, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை சிறப்பு துாய்மை முகாம்கள் நடத்தப்பட்டன.

628.49 கோடி ரூபாய் வருமானம்

அதன்படி, 1.50 லட்சத்துக்கும் அதிகமான பழைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன. இது தவிர, பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைதீர்ப்பு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கடந்த 22ம் தேதியில் மட்டும் நாடு முழுதும் உள்ள, 5,884 ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட சிறப்பு துாய்மை முகாமில், பழைய இரும்பு மற்றும் தேவையில்லாத கழிவுகள் சேரிக்கப்பட்டன. இவற்றை ஏலம் விட்டதன் வாயிலாக, 628.49 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதேபோல், தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டதால் ரயில்வே வளாகங்களில், 6.20 லட்சம் சதுர அடி இடம் மீட்கப்பட்டு உள்ளது" என்றனர்.

பயணிகளிடம் கருத்து

இந்த தூய்மை நடவடிக்கைகளுடன் பயணிகளின் குறைகளைக் கேட்டறியும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அக்டோபர் 22-ம் தேதி நாடு முழுவதுமுள்ள 5,884 ரயில் நிலையங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பயணிகள் தங்களது குறைகள், தேவைகள் மற்றும் ரயில்வே சேவைகள் தொடர்பான கருத்துகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பழைய பொருட்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டியது மட்டுமல்லாமல், பயன்படுத்தப்படாமல் கிடந்த இடங்களை மீட்டது, பழைய மின்னணு சாதனங்களை அகற்றியது, நிலுவையில் இருந்த புகார்களுக்கு தீர்வு கண்டது எனப் பல நடவடிக்கைகளை இந்திய ரயில்வே இந்த சிறப்பு முகாமின் மூலம் மேற்கொண்டுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+