செம.. சர்வதேச சேவையை ஆரம்பிக்கும் இந்திய ரயில்வே.. எந்த நாட்டுக்கு தெரியுமா?
சென்னை: நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் இந்தியன் ரயில்வே, விரைவில் சர்வதேச சேவையை தொடங்க இருக்கிறதாம். சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக வெளியாகி இருக்கும் இந்த தகவல் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.
இந்தியாவில் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே தான் உள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்திய ரயில்வேயும் உள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் மூலமே சென்று விடலாம். அந்த அளவுக்கு இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் உள்ளது. பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து ரயில்வே பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

அதேபோல், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நகரங்களை இயக்கும் வகையில் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரயில்வே ச்ர்வதேச ரயில் சேவையிலும் ஈடுபட இருக்கிறதாம். இந்தியாவில் இருந்து பூடானை இணைக்கும் வகையில் ரயில் விரைவில் இயக்கப்பட் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக அண்மையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:- அண்டை நாடான பூடானுக்கு விரைவில் ரயில்கள் இயக்கப்படும். அசாமில் இருந்து இந்த ரயிலானது இயக்கப்படும். இருநாடுகளுக்கு இடையேயான சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்கும் விதமாக அதிக பாயிண்ட்களை உருவாக்க பூடான் ஆர்வமாக உள்ளது.

இது அசாமிற்கும் மிகுந்த பயனளிக்கும் விதமாக இருக்கும்" என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தியா - பூடானை ரயில் வழித்தடம் மூலம் இணைக்கும் பணிகள் 2026க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் தன்ந்தி டோர்ஜி தனது சுற்றுப்பயணத்தின்போது கூறியதாவது:-
பூடான் அரசு இந்த திட்டத்தில் முதன் முதலாக பணிகளை மேற்கொள்ளும். பிறகு சாம்ட்சே, ஃபுயென்ஷோலிங், நங்காங்லாம் மற்றும் சம்ட்ருப்ஜோங்கர் ஆகிய பகுதிகளை இணைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்" என்றார். பூடானின் கேலேப்ஹூ முதல் அசாமின் கோக்ரஜார் நகரத்தை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மலைப்பிரதேசங்கள் நிறைந்த இந்த வழித்தடம் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இயற்கை வளங்களும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் ரம்மியான சூழலை கொண்ட பூடான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் இந்த ரயில் வழித்தடம் இணைக்கக்கூடியதாக உள்ளது. இந்தியர்கள் பூடானுக்கு செல்வதற்கு விசா எதுவும் தேவையில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications