அமெரிக்காவில் உள்ள.. இந்திய மாணவர்களுக்குத்தான் முதல் செக்.. டிரம்ப் எடுத்த.. விவகாரமான அஸ்திரம்
சென்னை: அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் லிஸ்டை கணக்கெடுக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த திட்டத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து முடித்து முறைகேடாக over stay செய்கிறார்கள்.
2. அதாவது படிப்பிற்கான விசா முடித்து.. அதன் அவகாசம் முடிந்தும் பலர் முறைகேடாக over stay செய்கிறார்கள்.
3. சிலர் படிப்பு விசா வாங்கி பார்ட் டைம் வேலை பார்க்கிறார்கள்.
4. இதை இந்தியர்கள் பலர் பாக்கெட் மணி பெற வேண்டும் என்று செய்கிறார்கள்.
5. இவர்களை எல்லாம் டிரம்ப் வரும் காலத்தில் கணக்கெடுத்து ஆக்சன் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்கும் டிரம்ப்:
அமெரிக்காவில் அத்துமீறி தங்கி உள்ள இந்தியர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக என்றே சில எஸ்ஓபி பின்பற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா பின்பற்ற உள்ள எஸ்ஓபி: அதாவது பின்பற்ற பட உள்ள செயல்பாட்டு வழிமுறை:
1. அமெரிக்கா முதலில் அங்கே தங்கி உள்ள விசா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும்.
2. படிப்பிற்கு விசா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கு எடுக்கும்.
3. சுற்றுலா விசா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும்.
4. எச் 1 பி விசா காலாவதி ஆனவர்களை கணக்கு எடுக்கும்.
5. இனி இவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
6. அதன்பின் இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கும். ஒன்று இந்திய விமானத்தில் அவர்களை நாட்டிற்கு அழைத்து செல்வது/
7. அல்லது அமெரிக்கா ராணுவ விமானத்தை உங்கள் நாட்டிற்குள் அனுமதியுங்கள் நாங்கள் வந்து விட்டுவிடுகிறோம் என்று கூறுவது.
8. இரண்டையும் இந்தியா ஏற்காத பட்சத்தில் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது. இதுவே டொனால்ட் டிரம்பின் திட்டம் என்கிறார்கள்.
கணக்கெடுப்பு தொடக்கம்:
அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவின் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானங்கள் அத்துமீறி குடியேறியவர்களின் சொந்த நாட்டிற்கே கொண்டு சென்று விடும். இந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு அந்தந்த நாடுகள் அனுமதி தர வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை. அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பலரை இந்தியா நாடு கடத்த திட்டமிட்டு உள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.
ஆனால் அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications