இஃப்தார் தந்த விஜய்.. முஸ்லிம்களை அவதூறாக பேசிய திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி! தவ்ஹீத் ஜமாத் வார்னிங்
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளித்தார். இதுபற்றி திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் பேசியபோது இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. இந்த பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் வழக்கம்போல் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து என்பது அரசியல் கட்சிகளால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது.
இதில் நடிகர் விஜயும் பங்கேற்றார். இஸ்லாமியர்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்ட அவர் அதன்பிறகு அனைவருடன் சேர்ந்து இஃப்தார் விருந்தை சாப்பிட்டார். இந்நிலையில் தான் விஜய் வழங்கிய இஃப்தார் விருந்தில் பங்கேற்ற இஸ்லாமியர்களை திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
அதாவது சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகர் விஜயை காட்டமாக விமர்சனம் செய்தார். அதேபோல் விஜயின் இஃப்தார் விருந்தில் பங்கேற்ற இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சர்ச்சையானது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்ட செய்தியில், ‛‛சமீபத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொது மேடையில் நடிகர் விஜய் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் குறித்து பேசும் போது நாகரீகமற்ற முறையில் பேசியது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது அவரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவரின் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரங்கெட்ட பேச்சாளர்களால் திமுகவிற்கு நன்மைக்கு பதிலாக தீமையே விளையும் என்பதை எச்சரிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications