சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கிறார் முதல்வர் ஸ்டாலின்... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பாராட்டு..!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாத பல நல்ல திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;
ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் 74 ஊரக ஒன்றிய பதவிகளில் 73லும் 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிகளில் 1, 115 இடங்களில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று ஏறக்குறைய 95 சதவிகித வெற்றியை பெற்றிருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் இந்த வெற்றி என்பது அளவிட முடியாததாகும். இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணமானவர் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். கடந்த ஆட்சியாளர்கள் தமிழகத்தை மிகப்பெரிய நிதி நெருக்கடியில் விட்டுச்சென்று விட்டனர்.ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் 202 வாக்குறுதிகளை தமிழக முதல் அமைச்சர் நிறைவேற்றினார்.
திமுகவின் தாரக மந்திரம்"சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம்"என்பதாகும். ஆனால், சொல்லாததையும் இன்றைக்கு தமிழக முதல் அமைச்சர் செய்து வருகிறார். குறிப்பாக சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காத்து வருகிறார். சமூக நல்லிணக்கத்தை பேணிக்காத்தும் மாநில உரிமைகளை நிலைநாட்டியும் வருகிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் வகையில்தான் தமிழக மக்கள் இந்த தேர்தல் முடிவை அளித்திருக்கிறார்கள்.
முதல் அமைச்சர் இது எங்களுடைய ஆட்சி அல்ல. நம்முடைய ஆட்சி என்றும் இது திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கான ஆட்சி என்றும் எங்களுடைய செயல்பாடை பார்த்து ஓட்டு போடாதவர்களும் ஏன் போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு எங்கள் ஆட்சியின் செயல்பாடு அமையும் என்று கூறினார்.
முதல் அமைச்சர் கூறியதுபோல இந்த குறுகியகால ஆட்சியில் செய்த நன்மைகளையும் இன்னும் செய்யப்போகும் ஏராளமான நன்மைகளை கருத்தில் கொண்டுதான் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் இந்த 5 மாதங்களில் இப்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்களித்த தமிழக மக்களுக்கும் சிறப்பாக செயல் பட்ட கூட்டணி கட்சியின ருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடித்திருக்கின்ற தமிழக தேர்தல் ஆணையம், தமிழக காவல் துறை தலைவர், அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications