இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா! 1967 ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்ற கட்சி! மமக வாழ்த்து!

பவள விழா காணும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா கண்டுள்ள நிலையில், 1967 ஆட்சி மாற்றத்திற்கு பெரிதும் துணை நின்ற கட்சி என மமக தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்துக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல முஸ்லிம்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடிய இயக்கம் முஸ்லீம் லீக் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது;

 முஸ்லிம் லீக்

முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டைசிறப்பிக்கும் வகையில், 'அகில இந்திய மாநாடு 2023', சென்னையில் நடைபெறுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். 1906-ல் 'இந்திய முஸ்லிம் லீக்' உருவாக்கப்பட்டு அதன்மூலம் நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தது முஸ்லிம் லீக், வெறும் சுதந்திரப்போராட்டத்தை மட்டும் முன்னெடுக்காமல் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், பிற மதத்தவரிடையே சமூக நல்லிணக்கத்தையும் வளர்த்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக

நாடு விடுதலைப் பெற்ற பிறகு நாடு பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று இந்திய முஸ்லிம்கள் மீது அபாண்டமான முறையில் பழிசுமத்தப்பட்டு இந்திய முஸ்லிம்கள் குற்றவாளிகளைப் போன்று சித்தரிக்கப்பட்ட நிலையிலும், இந்திய முஸ்லிம்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடிய இயக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றால் அது மிகையாகாது.

காயிதே மில்லத்

காயிதே மில்லத்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் தலைமையில் செயல்பட்ட இந்தக்கட்சி, கேரள மாநிலத்தில் ஆட்சிக்கட்டிலில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்தது. தமிழ்நாட்டிலும் 1967ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம் லீக் பெரிதும் துணையாக இருந்துள்ளது. வரலாற்று ரீதியாகச் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அரசியல், கல்வி, சமூக ரீதியாக மேம்படுத்தியதில் முஸ்லிம் லீக்கின் பங்கு அளப்பரியது.

ஜவாஹிருல்லா வாழ்த்து

ஜவாஹிருல்லா வாழ்த்து

இதுபோன்ற நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள முஸ்லிம் லீக் அதன் பவளவிழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. முஸ்லிம் லீக்கின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+