ராமநாதபுரம் தொகுதியை கொடுத்தால் பரவாயில்லை! திமுகவிடம் செல்லமாக அடம் பிடிக்கும் முஸ்லிம் லீக்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியிருக்கும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியையே தங்களுக்கு மீண்டும் ஒதுக்கினால் பரவாயில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லமாக அடம் பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். இன்று நேற்றல்ல காயிதேமில்லத் காலம் தொட்டு திமுகவுடன் நட்புறவை பேணி வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. இடையே சில ஆண்டுகள் மனக்கசப்புகள் வந்து சென்றாலும் அக்கட்சியின் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் வந்ததிலிருந்து திமுகவுடன் சுமூகமாக உறவு பேணப்படுகிறது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 எம்.பி.சீட்களை எதிர்பார்க்கும் முஸ்லீம் லீக், திமுக தொகுதி பங்கீட்டு குழு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது அதுபற்றி பேச திட்டமிட்டுள்ளது. சிட்டிங் எம்.பி. தொகுதியான ராமநாதபுரத்தை மீண்டும் திமுகவிடம் கேட்போம் எனக் கூறும் காதர் மொகிதீன் கூடுதலாக 1 தொகுதியையும் கேட்போம் என நம்பிக்கை பொங்க தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி கிடைக்காவிட்டால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் எதிர்பார்ப்பாக உள்ளது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இல்லாத முஸ்லீம் லீக், ராமநாதபுரத்தை திமுக மறுக்கும் பட்சத்தில் திருச்சி தொகுதியை கேட்டு வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குடன் திமுக விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியை திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி எதிர்பார்த்து காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குறித்த தகவல் ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications