Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூகுள் பிளே ஸ்டோரில் இந்தியன் ஆயில் சக்ஸஸ்.. ஒரே மாதத்தில் 40 லட்சம் டவுன்லோடு.. ஆடிப்போன சாட்ஜிபிடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் சமீபகாலமாக சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் தட்டுப்பாடு மற்றும் விநியோக தாமதம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய தேவையான சிலிண்டரை பெறுவதில் நிலவும் சிக்கல்களை தவிர்க்க, மக்கள் நவீன தொழில்நுட்பத்தை நாடிய விதம் இப்போது சூப்பரான சுவாரசியமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.. அது என்ன தெரியுமா?

மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் கடல் வழித்தடங்களில் பெரும் போக்குவரத்து நெரிசலும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் உருவாகி உள்ளன.

Indian Oil ONE App Success

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

இதனால் கப்பல்கள் இந்தியா வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.. இதன் விளைவாக, இந்தியாவின் பல மாநிலங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவ தொடங்கி விட்டது.. வழக்கமாக புக்கிங் செய்ததுமே ஓரிரு நாட்களில் வீடு தேடி வரும் சிலிண்டர், இப்போது கிடைப்பதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.. சிலர் 25 நாட்கள் என்கிறார்கள், சிலர் 28 நாட்கள் என்கிறார்கள்.

இந்த இக்கட்டான நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான சிலிண்டரை பெறப் பல வழிகளில் முயன்று வருகிறார்கள்..

பொதுவாக சிலிண்டர் வாங்க 2 வழிகள் உள்ளன.. ஒன்று, நேரடியாக கேஸ் ஏஜென்சி ஆபீசுக்கே சென்று கியூவில் நின்று புக்கிங் செய்வது, இன்னொன்று செல்பேன் மூலமாகவே வீட்டிலிருந்தே புக்கிங் செய்து கொள்வது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

ஐஓசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதற்காகவே "IndianOil ONE" என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.. இந்த ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்வது மட்டுமன்றி, அது எப்போது டெலிவரி செய்யப்படும் என்பதையும், புதிய இணைப்பு பெறுவது மற்றும் ஏஜென்சியை மாற்றுவது போன்ற வேலைகளையும் எளிதாகச் செய்ய முடியும்..

தட்டுப்பாடு நிலவிய இந்தச் சூழலில், மக்கள் ஏஜென்சிகளுக்கு அலைவதை தவிர்க்க இந்த செயலியை தீவிரமாக பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.. அந்தவகையில் இந்த ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஆப்பை தங்களது செல்போனில் டவுன்லோடு செய்துள்ளனர்..

இதன் விளைவாக, கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் இலவச செயலிகள் பட்டியலில் "IndianOil ONE" முதலிடத்தை பிடித்துள்ளதாம்.. அதுவும் எப்படி தெரியுமா? உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஏஐ செயலியான ChatGPT-யையே இது இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டதாம்.. ஒரு நாட்டின் அத்தியாவசிய தேவை என்பது பொழுதுபோக்கு அல்லது தொழில்நுட்பத் தேவையை விட எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இதுவே சாட்சி..

கூகுள் பிளே ஸ்டோர் - சாட்ஜிபிடி

சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு 55 லட்சம் முன்பதிவுகள் மட்டுமே நடக்கும் நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 75 லட்சமாக உயர்ந்துள்ளது.. அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் செயலியை பயன்படுத்த முயன்றதால், சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு முன்பதிவு செய்வதில் தாமதமும் ஏற்பட்டது..

வீடுகள் மட்டுமின்றி ஓட்டல்களுக்கும் இந்த தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு, பலர் மின்சார அடுப்புகளுக்கு மாற துவங்கி விட்டார்கள்.. ஆக, உலகளவில் முன்னணியில் இருக்கும் செயலிகளையே இந்திய அரசு நிறுவனத்தின் ஒரு செயலி, பின்னுக்கு தள்ளியிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+