சீன பொருட்கள் வேணவே வேணாம்.. இந்திய மக்கள் ஆவேச முடிவு.. கூகுளில் குவியும் "புறக்கணிப்பு"
சென்னை: 'புறக்கணிப்பு' பட்டியலில் உள்ள சீன தயாரிப்பு பொருட்கள் எவை எவை என்பதை கூகுளில் அதிகமான இந்தியர்கள் தேடுகிறார்கள். லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து இந்த மாற்றம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி கூடாரம் அமைத்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பட்டியலை சீனா வெளியிடவில்லை.

புறக்கணிப்போம்
இதனிடையே இந்திய வீரர்களை திட்டமிட்டு கொன்ற சீனாவிற்கு எதிராக மக்கள் திரும்பி உள்ளனர். இனி சீன தயாரிப்பு பொருட்களை வாங்குவதில்லை என்று பலரும் முடிவு செய்துள்ளனர். பல்வேறு வணிக கூட்டமைப்புகளும் சீன தயாரிப்பு பொருட்களை இனி விற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளன., பல்வேறு கட்சிகளும் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்போம் என்று களம் இறங்கி உள்ளன.

கூகுள் பொருட்கள்
இந்நிலையில் இந்தியாவில் விற்கப்படும் சீன பொருட்களின் பட்டியல், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சீன தயாரிப்புகளின் பட்டியல், சீன தயாரிப்புகளுக்கு மாற்று" ஆகியவற்றை கூகுள் சர்ச் என்ஜினில் இந்திய மக்கள் அதிகம் பேர் தேடி வருகிறார்கள். அத்துடன் சீன ஆப்கள், சீன ஆப்கள் இந்தியா, சீன பொருட்கள் இந்தியா என்று தேடுகிறார்கள்.

வேகமாக டிரெண்டிங்
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் இந்தியா சீனா எல்லையில் பதற்றங்கள் அதிகரித்ததால், 3 இடியட்ஸ்' பட புகழ் வினு வினோத் சோப்ரா சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து #BoycottChina, #BoycottMadeinChina, #BoycottChineseApps மற்றும் #BoycottTiktok ஆகியவை சமூக ஊடகங்களில் பிரபலமடையத் தொடங்கின. இப்போது இவை டிரெண்டாகி வருகின்றன.

வர்த்தகர்கள் கூட்டமைப்பு
மக்கள் பலரும் இனி சீன பொருட்களை இனி வாங்குவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். அண்மையில் எல்லையில் நடந்து வரும் பதற்றத்தை அடுத்து தங்கள் தொலைபேசிகளில் இருந்து டிக்டாக் ஆப்பை நீக்கினர். மேலும் தொலைபேசிகளிலிருந்து சீனாவின் பல்வேறு மொபை ஆப்களை நீக்கினார்கள். இதற்கிடையில், ஜூன் 16 ம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டங்கள் அதிகரித்த பின்னர் புறக்கணிக்கப்பட வேண்டிய 500 க்கும் மேற்பட்ட ‘மேட் இன் சீனா' தயாரிப்புகளின் பட்டியலை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) வெளியிட்டுள்ளது.

தொழில் கூட்டமைப்பு முடிவு
பட்டியலில் பொம்மைகள், துணிகள், ஜவுளி, ஆடை, அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள், தளபாடங்கள், வன்பொருள், காலணி, கைப்பைகள், சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள், மின் சாதனங்கள், கைக்கடிகாரங்கள், கல் வைத்த நகைகள், எழுதுபொருள், காகிதம், வீட்டு பொருட்கள் , சுகாதார பொருட்கள், வாகன பாகங்கள் போன்றவை. அடங்கி உள்ளன. அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது. சீனாவின் அணுகுமுறை இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications