எச்சில் ஊற ஊற இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபி இதுதான்.. எளிதாக மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
சென்னை: 2023ஆம் ஆண்டு நிறைவடையும் நேரத்தில், இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், உணவு பட்டியலில் மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்றுதான் அதிகமான மக்களால் தேடப்பட்டுள்ளதாம்.
2023-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள், படங்கள், உணவு வகைகள் அடங்கிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் பிரபலமான உணவு தேடல்கள் குறித்த கூகுள் வெளியிட்டுள்ள லிஸ்ட்டில், மாங்காய் ஊறுகாய் முதலிடத்தை பெற்றுள்ளது. இதே போல் பஞ்சாமிர்தம், திருவாதிரை களி, கொழுக்கட்டை மற்றும் ரவா லட்டு போன்ற உணவுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தியர்கள் பெரும்பாலானோரின் மோஸ்ட் ஃபேவரிட் மாங்காய். மாங்காயை வைத்து வகை வகையாக பல்வேறு பதார்த்தங்களைச் செய்து சாப்பிடுவோம். ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாம்பழ சீசன் நிலவும்போது மாம்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அப்போது, மாங்காய் ஊறுகாய் போடுவதும் பலரது வழக்கம். அந்தவகையில், மாங்காய் ஊறுகாய் போடுவது எப்படி என்றுதான் இந்தியர்கள் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
டாப் 10 ரெசிபி: மாங்காய் ஊறுகாய்க்கு அடுத்த இடத்தில், காக்டெயில் பானமான செக்ஸ் ஆன் தி பீச் (Sex on the beach) ரெசிபியை அதிகமானோர் தேடியுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில், ஸ்பெஷல் பிரசாதமான பஞ்சாமிர்தத்தின் செய்முறையை அதிகமானோர் தேடியுள்ளனர். திருவாதிரை களி, கொழுக்கட்டை, ரவா லட்டு ஆகிய ரெசிபிகளும் கூகுள் தேடலில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
மாங்காய் ஊறுகாய், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினராலும், பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. சிலர் நீண்ட நாட்கள் உப்பில் ஊறவைத்து மாங்காய் ஊறுகாய் செய்வார்கள். சிலர், உடனடியாக சிறிது நேரம் மட்டும் காய வைத்து ஊறுகாய் தயாரிப்பார்கள். மொத்த இந்தியாவே தேடிய மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி? நாமும் எளிதாகச் செய்யலாம்.
2023ன் டாப் டிஷ்ஷான மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
மாங்காய் - 2 அல்லது 3, வெந்தயம் - 5 டேபிள் ஸ்பூன், கடுகு - 4 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் - சிறிதளவு, மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப, பெருங்காயம் - ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு - 1, கல் உப்பு - தேவையான அளவு.
மாங்காய் ஊறுகாய் செய்யும் முறை: மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஈரம் போக காய வைக்க வேண்டும். பின்னர் மாங்காய் துண்டுகளில் கல் உப்பை போட்டு நன்றாக குலுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வறுத்த வெந்தயம், கடுகு மற்றும் பூண்டை பொடியாக மிக்சியில் அரைத்து எடுத்து, மாங்காயில் தூவி கிளறி விட வேண்டும். அதனுடன் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் பெருங்காயப்பொடியை கலந்து நன்றாக குலுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து சூடாக எடுத்து மாங்காயில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும். இந்த மாங்காய் ஊறுகாயை இரண்டு நாட்களுக்குப் பிறகு எடுத்து பார்த்தால் எண்ணெய்யுடன், மாங்காயில் மிளகாய் காரம் இறங்கி அசரடிக்கும் சுவையில் இருக்கும். இந்த ஊறுகாயை கண்ணாடி பாட்டிலில் வைத்து ஓராண்டு காலம் வரை பயன்படுத்தலாம். கூழ், பழைய சோறு முதல் அனைத்து வகை உணவுக்கும் இந்த மாங்காய் ஊறுகாயை பயன்படுத்தலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications