எங்கள தாண்டி தொடுடா பார்க்கலாம்.. பாகிஸ்தானுக்கு மரண பயம் காட்டும் இந்தியாவின் 4 தூண்கள்! இவைதான்
சென்னை: இந்தியாவுக்கு பதிலடி தருவதாக நினைத்து பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள், டிரோன்களை நம் வான் வழி பாதுகாப்பு கேடயமான எஸ் 400, ஆகாஷ், ஸ்பைடர், எம் ஆர் எஸ் ஏ எம், பராக் 8 ஆகியவை தடுப்பு தூண்களாக இருந்து இந்திய மண்ணில் விழ விடாமல் இடைமறித்து அழித்தன. பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகளை துரத்தி துரத்தி அழித்தன. இவை ஒவ்வொன்றும் எந்த மாதிரி தாக்கும் திறன் கொண்டது, இதன் சிறப்புகள் என்னென்ன என்பதனை இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள், டிரோன்களை இந்திய மண்ணில் விழ விடாமல் நம் வான் வழி பாதுகாப்பு கேடயமான எஸ் 400 சுதர்சன கவசம், ஆகாஷ், ஸ்பைடர், எம் ஆர் எஸ் ஏ எம், பராக் 8 ஆகியவை தடுப்பு தூண்களாக இருந்து இடைமறித்து அழித்தன வான் எல்லைப் பரப்பினை ஒரு கவசம் போல் பாதுகாத்தன. இவை ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகளை துரத்தி துரத்தி அழித்தன. இந்த வான்வழி பாதுகாப்பு அமைப்புகளான இவை ஒவ்வொன்றும் எந்த மாதிரி தாக்கும் திறன் கொண்டது, இதன் சிறப்புகள் என்னென்ன என்பதனை இங்கு பார்க்கலாம்.
எஸ்-400 சுதர்சன சக்கரம்

* ரஷ்யாவின் எஸ்-400, சுதர்சன சக்கரம் போல சுற்றி, சுற்றி வந்து அழிக்கக் கூடியது.
* மின்னல் வேகத்தில் எதிரிகளின் ஏவுகணைகளை வானிலேயே அழித்து ஒழிக்கும்.
* 600 கிமீ சதுர பரப்பளவில் எதையும் தாக்கும் திறன் கொண்டது.
* 400 கி.மீ. தூரம் சென்று தாக்கக் கூடிய ஆற்றல் படைத்தது.
* ஏவுகணைகள், விமானங்கள், ஹைப்பர்சோனிக் ஆகிய அனைத்தையும் துல்லியமாக அழித்து ஒழிக்கும் சக்தி படைத்தது.
ஆகாஷ்

* இந்தியாவே சொந்தமாகவே தயாரித்த வான் தடுப்பு அமைப்பு தான் இந்த ஆகாஷ்.
* 25 - 30 கி.மீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
* உயரத்தை பொறுத்தவரை 18 கீமீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
* மணிக்கு 3,000 கிமீ வேகத்தில் செல்லும்.
* ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.
* 2000 சதுர கிமீ தூரத்தை பாதுகாக்க முடியும்.
பராக்

* இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா தயாரித்த வான் தடுப்பு அமைப்பு தான் இந்த பராக்.
* நுணுக்கமான தாக்குதல்களை கூட பராக் அழித்து ஒழிக்கும்.
* அதி நவீன சென்சார், டார்கெட் லாக்கிங் தொழில் நுட்பச் சிஸ்டம் இதில் உள்ளது.
* 15 - 80 கி.மீ தூரம் சென்று தாக்கும்.
* 10 - 18 கி.மீ. உயரம் வரை சென்று தாக்கும்.
* மணிக்கு 5000 கிமீ வேகத்தில் சென்று ஒரே நேரத்தில் 24 இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டது.
* 1000 சதுர கிமீ என்ற அளவுக்கு வான் பாதுகாப்பு அளிக்கும்.
ஸ்பைடர்

* இஸ்ரேல் மற்றும் இந்தியா இணைந்து தயாரித்தது தான் ஸ்பைடர்.
* 100 கிமீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
* 10 அடி முதல் 16 கிமீ உயரம் வரை சென்று தாக்கக் கூடியது
* மணிக்கு 2500 கிமீ தூரத்தில் சென்று ஒரே நேரத்தில் 12 இலக்குகளை அழிக்கும்.
* 5 ஆயிரம் சதுர கிமீ அளவிலான வான் பாதுகாப்பினை இதனால் வழங்க முடியும்.
எம்ஆர் - எஸ்ஏஎம்
* பராக்கின் மற்றொரு வகை தான் எம்ஆர் - எஸ்ஏஎம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு.
* இது 70 - 100 கி.மீ தூரம் வரை செய்து தாக்கக் கூடியது.
* 20 கிமீ உயரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
* மணிக்கு 3,700 கிமீ வேகத்தில் சென்று தாக்குவது மட்டும் இன்றி ஒரே நேரத்தில் 12 இலக்குகளை அழிக்கும் திறன் படைத்தது.
* சுமார் 7,000 சதுர கிமீ வான் பரப்பை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
எல்லையில் போர் பதற்றம்
கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணியளவில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் முகாம்கள் வேரோடு அழிக்கப்பட்டன.
வானிலேயே இடைமறித்து அழிப்பு
அதாவது இந்த தாக்குதலானது இந்தியாவின் ரபேல் விமானத்தில் இருந்து புறப்பட்ட ஸ்கால்ப் ஏவுகணைகள் மற்றும் ஹாம்மர் குண்டுகள் மூலமாக நடத்தப்பட்டது. மேலும் இந்திய மண்ணில் இருந்தபடியே இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்தது இந்திய ராணுவம். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது.
இதனையும் இந்தியா தடுத்து நிறுத்தி வானிலேயே இடைமறித்து அழித்தது. தொடர்ந்து மறுநாளும் அதாவது நேற்று முன் தினம் இந்தியாவின் காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பாகிஸ்தான் அனுப்பியது. ஆனால் வானிலேயே அவற்றை அழித்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு சாவு பயத்தை காட்டியது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications