சிலிண்டர் சேமிப்பு இந்தியாவின் 2 நாள் தேவைக்குக் கூடப் போதாது.. மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: இந்தியாவின் சமையல் எரிவாயு சேமிப்புத் திறன் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மார்ச் 18 நிலவரப்படி, நம்மிடம் இருக்கும் சேமிப்பு இந்தியாவின் 2 நாள் தேவைக்குக் கூடப் போதாது. இந்தியாவில் தற்போது விசாகப்பட்டினம் (60,000 டன்) மற்றும் மங்களூரு (80,000 டன்) ஆகிய இடங்களில் மட்டுமே நிலத்தடி எரிவாயு சேமிப்பு நிலையங்கள் உள்ளன. நாட்டின் ஒரு நாள் சராசரித் தேவை 90,000 டன், ஆனால் நம்மிடம் உள்ள மொத்தச் சேமிப்பு 1.4 லட்சம் டன் மட்டுமே. நம்மிடம் இருக்கும் சிண்டர் சேமிப்பு இந்தியாவின் 2 நாள் தேவைக்குக் கூடப் போதாது.. இந்தியாவில் எரிவாயு சேமிப்பு குறைவாக இருப்பது ஏன்? என்பது குறித்து பார்ப்போம்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் கண்ணா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்தியா தனது எரிவாயு சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அரசியல் மோதல்கள், இயற்கைச் சீற்றங்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டால், நாட்டை முடக்காமல் இருக்க இந்தச் சேமிப்பு ஒரு 'பஃபர்' ( போலச் செயல்படும். எதிரி நாடுகள் எரிபொருளை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இது நிச்சயம் உதவும். இதுபற்றி இந்து பிசினஸ் லைன் ஊடகம் நடத்திய ஆய்வின் படி பார்ப்போம்.

எரிவாயு சேமிப்புத் திறனில் இந்தியா ஏன் பின்தங்கியுள்ளது?
தற்போதைய வளைகுடா நெருக்கடிக்கு முன்பு வரை, இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மலிவாகவும் எளிதாகவும் கிடைத்ததால், அதிக செலவு செய்து அதைச் சேமித்து வைப்பதற்கான அவசியம் நமக்கு ஏற்படவில்லை தற்போது ஈரான் போரால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகின்றன. இந்தியா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் நுகர்வு நாடு.. இறக்குமதியை சார்தே இருந்து வருகிறது. இப்போது திடீரென போர் சூழலால் எரிபொருள் விநியோகம் என்பது ஒரு சவாலாக மாறி வருகிறது. இந்தச் சூழலில், கச்சா எண்ணெய், எல்.என்.ஜி , எல்.பி.ஜி போன்ற எரிபொருட்கள் இருப்பு இந்தியாவில் போதிய அளிில் இல்லை. எனவே தற்போதைய நிலையில் வணிகரீதியான மற்றும் பாதுகாப்பு சார்ந்த சேமிப்பு மிக முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது
எரிபொருள் சேமிப்புத் திறன் ஏன் முக்கியம்?
பொதுவாக எரிபொருள் சேமிப்புத் திறன் என்பது பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: அரசு தலைமையிலான பாதுகாப்பு சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தலைமையிலான வணிகச் சேமிப்பு. இது எரிசக்தி மேலாண்மையில் ஒரு முக்கிய அங்கமாகும். எரிவாயு சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு எதிராக இது பாதுகாப்பை வழங்கும்-
நாடுகளுக்கு இடையே ஏற்படும் சண்டை, உள்நாட்டு மோதல், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் திடீரென கப்பல் பிரச்சனை உள்படப பெரிய தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் விநியோகத் தடைகளின் போது, இந்தச் சேமிப்பு ஒரு தடுப்பு அரணாக செயல்படுகிறது. இது செயல்பாடு தொடர்வதை உறுதி செய்கிறது. முக்கியமாக, எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஒரு அரசியல் ஆயுதமாகவோ அல்லது பேரம் பேசும் கருவியாகவோ பயன்படுத்தும் எதிரிகளுக்கு இது வாய்ப்பாகிவிடும். எண்ணெய் மற்றும் எரிவாயு விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நிதி அபாயங்களைக் குறைக்க வேண்டுமானால் நாம் கண்டிப்பாக ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்
எல்.பி.ஜி சேமிப்புத் திறனின் தற்போதைய நிலை என்ன?
இந்தியாவின் நிலைமை என்ன.. வெளியான தகவலின் படி, மார்ச் 18 நிலவரப்படி இந்தியாவின் எல்.பி.ஜி சேமிப்புத் திறன் மிகவும் கவலைக்கிடமான நிலையே நீடிக்கிறதா. இது நாட்டின் இரண்டு நாள் தேவையைக்கூட ஈடுக்கட்டாது. சமையல் எரிவாயு விநியோகத்தில் இந்தியா உலகளவில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் அதன் உள்கட்டமைப்பு என்பது நீண்ட காலச் சேமிப்பை விட, உடனடி விநியோகத்திற்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கிறது.
தற்போது இந்தியா தனது சமையல் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பிற்காக இரண்டு பெரிய நிலத்தடி எல்.பி.ஜி சேமிப்பு நிலையங்களை மட்டுமே நம்பியுள்ளது. ஒன்று வங்கடலில் இருக்கிறது. இன்னொன்று அரபிக்கடலில் இருக்கிறது. வங்க கடலை பொறுத்தவரை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள நிலையம் தெற்காசிய எல்.பி.ஜி நிறுவனத்தால் (SALPG - HPCL மற்றும் TotalEnergies இடையிலான கூட்டு முயற்சி) இயக்கப்படுகிறது. இதன் கொள்ளளவு 60,000 டன்கள் ஆகும்.

அதேபோல் அரபிக்கடலை பொறுத்தவரை கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள நிலையம் ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தால் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது. மங்களுரில் இருப்பது 80,000 டன் கொள்ளளவு கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி சேமிப்பு நிலையமாகும். இவை இரண்டும் சேர்த்து மொத்தம் 1.4 லட்சம் டன் சமையல் எரிவாயுவை சேமிக்க முடியும். இந்த இரண்டையும் சேர்த்தால், இந்தியாவின் ஒரு நாள் சராசரித் தேவையான 90,000 டன்களில், இரண்டு நாட்களுக்கும் குறைவான தேவையையே ஈடுகட்டும். அதாவது நம்மிடம் இருப்பது இரண்டு நாளைக்கு கூட போதாது..
இந்தியா ஏன் பெரிய அளவிலான பாதுகாப்பு எல்.பி.ஜி சேமிப்பை உருவாக்கவில்லை?
இந்தியா ஏன் பெரிய அளவிலான பாதுகாப்பு எல்.பி.ஜி சேமிப்பை உருவாக்கவில்லை என்றால், இந்தியாவின் உள்கட்டமைப்பு என்பது எரிவாயுவை துறைமுகங்களில் இருந்து விரைவாக வீடுகளுக்குக் கொண்டு செல்வதற்கே முன்னுரிமை அளித்து வந்தே காரணம். கச்சா எண்ணெய்க்கு இந்தியா பெரிய அளவில் பாதுகாப்புச் சேமிப்பை வைத்திருந்தாலும், எல்.பி.ஜி-க்கு அத்தகைய சேமிப்பை உருவாக்குவதில் தொழில்நுட்ப, புவியியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் தடையாக இருந்து வந்தன. சிலிண்டர் தேவை அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் ஹார்முஸ் ஜலசந்தியில் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஏற்படும் வரை, உலகச் சந்தையில் எல்.பி.ஜி மலிவாகவும் தாராளமாகவும் கிடைத்து வந்தது. இதனால் அதிக செலவு செய்து சேமித்து வைப்பதற்கான அவசியம் உணரப்படவில்லை.
எரிவாயு சேமிப்பை உருவாக்குவதில் இப்போதைய நிலை என்ன?
மத்திய அரசு இப்போது தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், டெலிவரி செய்யும் அளவிற்கு இருந்தால் போதும் என்கிற நிலையில் இருந்து , தட்டுப்பாடு ஏற்பட்டால் சமாளிக்கும் அளவிற்கு சேமிப்பு கிடைங்கை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கச்சா எண்ணெய்க்கு இருப்பதைப் போல இயற்கை எரிவாயுவுக்கு தற்போது எந்த ஒரு பாதுகாப்புச் சேமிப்பு நிலையமும் செயல்பாட்டில் இல்லை என்பது உண்மை.
மத்திய அரசு வேகம்
சமீபத்திய தட்டுப்பாடுகள் மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடிக்குப் பிறகு, பிரத்யேக எரிவாயு சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதற்கான ஒரு முன்மொழிவை உருவாக்கி, பாதுகாப்பு எரிவாயு சேமிப்பிற்காக ஒரு தனி அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனை செய்திருக்கிறது.
ராஜஸ்தானில் சேமிப்பு கிடங்கு
எல்.என்.ஜி / எல்.பி.ஜி முனையங்கள் தங்களின் சேமிப்புத் திறனை கூடுதலாக 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள உப்புப் பாறை குகைகள் எரிவாயு சேமிப்பிற்கு உகந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது உட்பட ஆறு புதிய இடங்களில் சேமிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகளை 'இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்' தயாரித்து வருகிறது.
உடனடி விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்ததே இந்த நிலைக்கு காரணம்
இறுதியாக சொல்வது என்றால், இந்தியாவின் பாதுகாப்பு எரிவாயு சேமிப்பில் நிலவும் பின்தங்கிய நிலை என்பது, நீண்ட காலப் பாதுகாப்பை விட உடனடி விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்த கொள்கையாலும், தொழில்நுட்ப மற்றும் புவியியல் ரீதியான தடைகளாலும் ஏற்பட்ட விளைவு தான் காரணம். அதேநேரம் . சிலிண்டர் சேமிப்பு தான் இரண்டு நாள் அளவிற்கு கூட இல்லை என்று கூறப்பட்டாலும் இந்தியாவில் சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை.. ஏனெனில் அரசு வரவர விநியோகித்து வருகிறது. சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதால் எதிர்காலத்தில் பிரச்சனையை எளிதாக சமாளிக்க முடியும். தற்போது உள்ள நிலையில் வீட்டு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை என்பதே உண்மை.
-
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
சிலிண்டர் ஏன் சிவப்பு கலரில் இருக்கு? நீலம், மஞ்சள் எதுக்கு? மக்கள் அறிய வேண்டிய நிறய குறியீடுகள் -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!














Click it and Unblock the Notifications