Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசராத இந்திய மக்கள்.. ஆடிப்போன உலக நாடுகள்.. தங்கம் விலை உயர்ந்தும் எதுவும் மாறவில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியர்களுக்கு தங்கம் மீதான காதலை சொல்லில் அடங்காது, தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் வாங்குவதற்கு தயாராக இருக்கும் மக்களால் வரலாற்று காணாத உச்சத்தை தொட்ட பின்பும் தங்கம் இறக்குமதி குறையாமல் இருப்பதாக மத்திய அரசு தரவுகள் கூறுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் மத்திய அரசு தங்கம், வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்த முக்கியமான நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.

2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் தங்க இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த காலகட்டத்தில் தங்க இறக்குமதி 28.73% அதிகரித்து 69 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 53.52 பில்லியன் டாலராக இருந்ததுள்ளது.

Gold Silver Import India Gold Imports 2025 Gold Imports Surge to 69 Billion India Trade Deficit Widens High Gold Prices India Government Gold Import Curbs India gold imports 2025-26 gold imports rise 29 percent India gold imports 69 billion trade deficit India April February 2025 gold price India Rs 151500 India second largest gold consumer Switzerland gold imports India gold jewellery demand India current account deficit gold impact silver imports India 2025 government curbs on gold imports India trade deficit 310 billion high gold prices despite imports surge gold accounts for 5 percent imports UAE South Africa gold supply India 2025 29 69 151500 CAD 310 5 2025

தங்க தேவை அதிகரிப்பு
இந்தியா உலகில் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது, முதல் இடத்தில் வழக்கம்போல் சீனா உள்ளது. இந்தியாவில் தங்க இறக்குமதியின் பெரும்பங்கு நகைத் துறையின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. திருமணங்கள், விழாக்கள் மற்றும் முதலீட்டு காரணமாக தங்கத்தின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஆனால் மற்ற நாடுகளில் நகை தேவை என்பது மிகவும் குறைவு, உலகளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் சீனாவில் கூட தங்கத்தை நகைகளாக வாங்குவது குறைவு. காயின், பார், குண்டு மணி, இதர பொருட்களாக வாங்குவது தான் அதிகம்.

தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது?
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது?

வர்த்தக பற்றாக்குறையில் தாக்கம்
சரி, தங்க இறக்குமதி அதிகரிப்புக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் என்ன பிரச்சனை. பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் வர்த்தக பற்றாக்குறையை குறைவாக இருக்க வேண்டும், பலமாக இருக்க வேண்டும் என்றால் ஏற்றுமதி உபரியாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவில் பெரும்பாலான முக்கியமான பொருட்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் வர்த்தக பற்றாக்குறையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை (Trade Deficit) அதிகரிக்க முக்கிய காரணமாக தங்கம் இருந்துள்ளது அமைந்துள்ளது.

2025-26 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 310.60 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்த 261.80 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வாகும்.

இது இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கும் (Current Account Deficit) பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உருவாகியுள்ளது என்பது தான் தற்போதை முக்கிய பிரச்சனையாக உள்ளது.

Gold Price: உச்சானிக் கொம்பில் இருந்து விழுந்த தங்கம்.. பணத்தை ரெடி பண்ணுங்க.. என்ட்ரி பாயின்ட் வருது
Gold Price: உச்சானிக் கொம்பில் இருந்து விழுந்த தங்கம்.. பணத்தை ரெடி பண்ணுங்க.. என்ட்ரி பாயின்ட் வருது

இறக்குமதி நாடுகள்
இந்தியாவுக்கு தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் சுவிஸ் சுமார் 40% பங்குடன் முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 16% பங்கீட்டையும் மற்றும் தென் ஆப்பிரிக்கா சுமார் 10% பங்கீட்டையும் கொண்டு உள்ளன.

மேலும் நாட்டின் மொத்த இறக்குமதிகளில் தங்கம் மட்டும் கிட்டத்தட்ட 5-6% பங்கைக் கொண்டுள்ளது.

வெள்ளி இறக்குமதி
இந்தியாவில் தங்கத்துடன் சேர்த்து, வெள்ளி இறக்குமதியும் வேகமாக உயர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் வெள்ளி இறக்குமதி 142.87% உயர்ந்து 11.43 பில்லியன் டாலராக உள்ளது. வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாகனத் துறை மற்றும் மருந்து உற்பத்தி போன்ற தொழில்துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

பதிலுக்கு பதில் அடி நிச்சயம்.. டிரம்ப்-க்கு ஈரான் கொடுத்த வார்னிங்.. அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
பதிலுக்கு பதில் அடி நிச்சயம்.. டிரம்ப்-க்கு ஈரான் கொடுத்த வார்னிங்.. அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?

மார்ச், ஏப்ரல் தங்கம் விலை
மார்ச் மாதத்தில் 24 கேரட் தங்கம் விலை கிட்டதட்ட 13.34 சதவீதம் சரிந்துள்ளது, ஏப்ரல் மாதத்தில் 0.72 சதவீதம் குறைந்துள்ளது. இன்று சர்வதேச சந்தையில் 0.5 சதவீதம் வரையில் குறைந்திருக்கும் வேளையில் இந்திய ரீடைல் சந்தையிலும் இது எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

அரசு நடவடிக்கை: இறக்குமதி கட்டுப்பாடுகள்
இந்த அதிகரித்த இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு சமீபத்தில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தங்கம், வெள்ளி இறக்குமதி ஏன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து தங்கத்திற்கும் டாலரில் தான் பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதிகப்படியாக தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யும் போது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது ரூபாய் மதிப்பில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தான் இந்தியாவின் பொருளாதாரத்தில் இரு முனை வாளாக செயல்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+