தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.. முதலமைச்சர் விஜய்க்கு நன்றி சொன்ன இண்டிகோ விமான நிறுவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விமான எரி பொருள் மீதான வாட் வரியை தமிழக அரசு கணிச​மாக குறைத்​துள்ள நிலையில், இண்டிகோ விமான நிறுவனம், தமிழக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் நன்றி தெரிவித்துள்ளது.

விமான எரிபொருள் வரி குறைப்பை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு அரசின் வணிகவரித் துறை சார்​பில் வெளி​யிடப்​பட்ட அரசிதழ் அறி​விக்​கை​யில், தமிழ்​நாடு மதிப்​புக் கூட்டு வரிச் சட்​டத்​தின்​படி விமான எரிபொருள் மீதான மதிப்​புக்​கூட்டு வரி (VAT) தற்​போது குறைக்​கப்​பட்​டுள்​ளது.

vat tax vijay indigo

அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் திட்​ட​மிடப்​பட்ட விமான சேவை நிறு​வனங்​களுக்கு எண்​ணெய் நிறு​வனங்​கள் விற்​பனை செய்​யும் எரிபொருள் (ஜெட் எரிபொருள் உட்​பட) மீதான வரி 29 சதவீதத்​தில் இருந்து 16 சதவீத​மாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னையைத் தவிர, மாநிலத்​தில் உள்ள பிற விமான நிலை​யங்​களில் விமானங்​களுக்கு நிரப்​பப்​படும் எரிபொருள் வரி 29 சதவீதத்​தில் இருந்து 1 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வரிக் குறைப்பு 2026 நவம்பர் 1 முதல் 2027 அக்.31 ஆம் தேதி வரை ஓராண்டு நடைமுறை​யில் இருக்​கும். வரிச் சலுகையைப் பெற, எரிபொருள் விற்​பனை செய்​யும் நிறு​வனம், அதை வாங்​கும் விமான நிறு​வனம் பூர்த்தி செய்து கையொப்​பமிட்ட உறுதி​மொழி படிவத்தை தங்​கள் மாதாந்​திர வரிக் கணக்​குடன் சம்​பந்​தப்​பட்ட மதிப்​பீட்டு அலு​வலரிடம் சமர்ப்​பிக்க வேண்​டும்.

இந்த படிவம் ஒவ்​வொரு மாதமும் அளிக்​கப்​பட வேண்​டும். வாங்​கப்​பட்ட எரிபொருள் உள்​நாட்டு விமானப் பயன்​பாட்​டுக்​கானது என்​ப​தையும் அதில் விமான நிறு​வனம் உறுதிசெய்ய வேண்​டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அந்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமான சேவை நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விமான டர்பைன் எரிபொருள் (ATI) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைக்கும் தமிழக அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், இந்த முற்போக்கான முயற்சிக்கு முதலமைச்சர், ஜோசப் விஜய்க்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய நடவடிக்கைகள் விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து, இந்தியாவில் மேலும் வலுவான விமானப் போக்குவரத்துச் சூழலை உருவாக்கப் பங்களிக்கின்றன. இதுபோன்ற முற்போக்கான முயற்சிகள் விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என நம்புகிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+