Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamilnadu Secret ballots : மறைமுக தேர்தல்.. அதிமுக அதிக இடங்களில் வெற்றி.. தொண்டர்கள் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சிகளில் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 27 மாவட்டங்களில் 26 மாவட்டங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 14 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டது. 12 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

Jan 11, 2020, 4:07 pm IST

சிவகங்கை மாவட்டத்தில் இரு கட்சிகளும் சம நிலையில் இருப்பதால் அங்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை
Jan 11, 2020, 4:07 pm IST

அதிமுக 14 இடங்களிலும் திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது
Jan 11, 2020, 4:07 pm IST

27 மாவட்டங்களில் 26 மாவட்டங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன
Jan 11, 2020, 4:07 pm IST

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி
Jan 11, 2020, 2:01 pm IST

ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் 273/314 அதிமுக 126 திமுக 127 வெற்றி
Jan 11, 2020, 2:01 pm IST

மாவட்ட ஊராட்சி தலைவர் 26 /27, அதிமுக 14 திமுக 12 வெற்றி
Jan 11, 2020, 12:30 pm IST

விருதுநகர் டிஎஸ்பியை அரிவாளால் வெட்டிய 4 பேரில் இருவர் கைது
Jan 11, 2020, 12:30 pm IST

சுயேச்சைகளின் ஆதரவை பெறுவதில் ஏற்பட்ட தகராறின் போது டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு
Jan 11, 2020, 12:30 pm IST

சுயேச்சை இரு இடங்களிலும் அமமுக ஒரு இடத்திலும் வெற்றி
Jan 11, 2020, 12:30 pm IST

நரிக்குடி ஊராட்சியில் அதிமுக 5 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் வெற்றி
Jan 11, 2020, 12:30 pm IST

அரிவாள் வெட்டை அடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது
Jan 11, 2020, 12:30 pm IST

பதற்றமான வாக்குச்சாவடியான நரிக்குடியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
Jan 11, 2020, 12:29 pm IST

நரிக்குடியில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
Jan 11, 2020, 12:29 pm IST

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு
Jan 11, 2020, 12:29 pm IST

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு
Jan 11, 2020, 11:50 am IST

இதில் காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆண்டனி வெற்றி
Jan 11, 2020, 11:50 am IST

காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆண்டனிக்கும் பாஜகவின் மனோகர குமாருக்கும் இடையே போட்டி நிலவியது
Jan 11, 2020, 11:50 am IST

காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 5 இடங்களில் வெற்றி
Jan 11, 2020, 11:49 am IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியத்தில் குலுக்கல் முறையில் காங்கிரஸ் வெற்றி
Jan 11, 2020, 11:49 am IST

இதனால் தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
Jan 11, 2020, 11:49 am IST

4 ஒன்றியங்களிலும் இதுவரை எந்த கட்சியின் உறுப்பினர்களும் வரவில்லை
Jan 11, 2020, 11:49 am IST

திருவாலங்காடு, திருத்தணி, ஆர் கே பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் மறைமுக தேர்தல் தொடங்கவில்லை
Jan 11, 2020, 11:49 am IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் தொடங்கவில்லை
Jan 11, 2020, 11:37 am IST

மதுரை மேலூரில் திமுக கவுன்சிலர்களுடன் வந்த அமமுக கவுன்சிலர்களால் பரபரப்பு
Jan 11, 2020, 11:21 am IST

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் திமுகவின் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு
Jan 11, 2020, 11:21 am IST

அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவின் சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு
Jan 11, 2020, 11:21 am IST

கரூரில் அதிமுக சார்பில் எம்எஸ் கண்ணதாசன் வெற்றி
Jan 11, 2020, 11:21 am IST

கரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி
Jan 11, 2020, 11:14 am IST

திமுகவை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலால் பரபரப்பு
Jan 11, 2020, 11:14 am IST

சுயேச்சை வேட்பாளர்களை திமுக வேட்பாளர்கள் தடுப்பதாக புகார்
READ MORE

Indirect elections process to be conducted across Tamilnadu today Live Updates
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+