"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்‌ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் அமெரிக்கா போர் காரணமாக நம் நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடினால் ஹோட்டல்கள், விடுதிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் புதிதாக கேஸ் புக் செய்பவர்களுக்கு 15 முதல் 20 நாட்கள் ஆவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலரும் மாற்று வழியினை தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வசித்து வருபவர்கள், ஓட்டல்களில் உணவு இல்லாமல் போய்விட்டாலும், வீட்டிலும் சிலிண்டர் தீர்ந்துவிட்டாலும் இண்டக்‌ஷன் ஸ்டவ் மூலமாக சமைத்து சாப்பிட்டுவிடலாம் என மாற்று ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டனர்.

Induction Stove Go Out of Stock in Chennai Amid Cylinder Shortage Ground Report

தற்போது இந்த இண்டக்‌ஷன் அடுப்புகளும் பல கடைகளில் ஸ்டாக் இல்லை என்ற அளவுக்கு விற்று தீர்ந்துவிட்டனவாம். வழக்கமான நாட்களில் ஒரு கடையில் 40 இண்டக்சன் அடுப்புகள் விற்பனையாகும் நிலையில், தற்போது 130-க்கும் அதிகமான அடுப்புகள் விற்கப்படுகின்றனவாம். அதாவது 3 முதல் 4 மடங்கு விற்பனை அதிகரித்துவிட்டதாம்.

டிஸ்பிளே பீஸ் வரைக்கும் எல்லாமே காலியாகி விட்டது. அதற்கு பிறகும் கூட நிறைய கஸ்டமர்கள் இண்டக்ஸன் டவ் அடுப்பு கேட்டு வந்தனர். அவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் நாளைக்கு வாருங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறோம். அந்த அளவுக்கு தேவை ஏற்பட்டு இருப்பதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனல் நேரடியாக சத்யா மற்றும் வசந்த் அன் கோ கடைகளுக்கே சென்று கள நிலவரத்தை பதிவு செய்துள்ளது. கடை ஊழியர்கள், விற்பனையாளர்கள் சொன்ன கருத்தை மேலே உள்ள வீடியோவில் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+