Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா வீரலட்சுமியை நியாபகம் இருக்கா? விஜயலட்சுமிக்கு பின்னாடி இவங்களா? சீமானுக்கு சிக்கல்.. சிதறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ள நிலையில் விஜயலட்சுமிக்கு உறுதுணையாக இன்று வீரலட்சுமி உடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை விஜயலட்சுமி இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக இன்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

Infamous Veeralakshmi supports Actress Vijayalakshmi in the complaint against Naam Tamilar Seeman

பேட்டி: அவர் தனது பேட்டியில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோர்க்கும் தெரியும்.

சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம்.

ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.

அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Infamous Veeralakshmi supports Actress Vijayalakshmi in the complaint against Naam Tamilar Seeman

வீரலட்சுமி: விஜயலட்சுமி இன்று புகார் கொடுக்க சென்ற போது, அவருடன் இன்று வீரலட்சுமி உடன் இருந்தார். தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி கடந்த 2021ம் ஆண்டே விஜயலட்சுமிக்கு ஆதரவாக களமிறங்கினார். இன்றும் போலீசில் விஜயலட்சுமி புகார் கொடுக்க சென்ற போதும் வீரலட்சுமி அவருடன் இருந்தார்.

அதன்பின் பேட்டி கொடுக்க வந்த விஜயலட்சுமியிடம் என்ன பேச வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி அவருக்கு ஆலோசனை வழங்கினார். ஒரு காலத்தில் தமிழ்நாடு அரசியலில் மிகவும் பிரபலமாகி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தார்.

முக்கியமாக ஒருவர் தனக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக வீரலட்சுமி வீடியோ வெளியிட்டார். அதில் அந்த நபருக்கு எதிராக வெளியிட்ட வீடியோவில் கையில் வீச்சரிவாளோடு நின்று மிரட்டல் விடுத்தார். முக்கியமாக அந்த நபரின் ஆண் உறுப்பை அறுப்பேன் என ஆவேசமாக பேசியிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் போலீசார் ஆபாச படங்களை அனுப்பிய நபரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில்தான் வீரலட்சுமி கவனம் பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு கூட நடிகை விஜயலட்சுமிக்கு நீதி கோரி வீரலட்சுமி போராட்டம் செய்தார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் வீரலட்சுமி விஜயலட்சுமிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார்.

புகார்: நடிகை விஜயலட்சுமி.. ஒரு காலத்தில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றார். அந்த படத்திற்கு பின் பெரிதாக இவருக்கு வாய்ப்பு வரவில்லை. அதன்பின் பல்வேறு இணை ரோல்களில் விஜயலட்சுமி நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்தார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.

இது தொடர்பாக பல்வேறு வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார். அதிலும் அவர் வெளியிட்ட 3 வீடியோக்கள் மக்கள் இடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. முதலில் சீமானை கடுமையாக ஒருமை வார்த்தைகளில் திட்டி விமர்சனங்களை வைத்தார் விஜயலட்சுமி. அதன்பின் சீமானின் சில வீடியோக்களை வெளியிட்டது விஜயலட்சுமி தரப்பு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+