ஆண்மைக்குறைவா? சனி பகவானை சந்தோஷப்படுத்த நல்லா சாப்பிடுங்க..குழந்தை பாக்கியம் தேடி வரும்
சென்னை: இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிப்பது ஆண்மைக்குறைவு பிரச்சினை. திருமணமாகி 6 மாதத்திலேயே குழந்தை பற்றிய ஏக்கம் பலரையும் வாட்டி வதைக்கிறது. ஆண்மை குறைவு உள்ளவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். நமக்கு வாரிசே இல்லாமல் போய்விடுமோ என்ற பயம்தான் காரணம். கிரக கோளாறுகள் சிலருக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது. சத்தான உணவுகளை சாப்பிட்டு சந்தோஷமாக வாழ்ந்தாலே ஆண்மை குறைவை வெல்லலாம் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
சத்தாக சாப்பிடுவதில்லை அதுவும் காரணமாகிறது. கிரக பாதிப்புகள் இருந்த முன்னோர்கள் கூட வாரிசுகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கேற்ப பரிகாரம் செய்தும் சத்தான உணவுகளை சாப்பிட்டும் மனம் தளராமல் வாழ்ந்தால் போதும் அந்த ஆரோக்கியமான நினைவுகளும் பாசிட்டிவ் ஆன எண்ணங்களுமே ஆண்மை குறைவை நீக்கிவிடும்.
உணவும் கிரகங்களும்: நாம் சாப்பிடும் உணவுகள் கண்டிப்பாக நவ கிரகங்களை சமன் செய்யும் மற்றும் உடலில் இருக்கும் அனைத்து ஹார்மோன்களையும் சமன் செய்யும். உடல் உறுப்புகள் அனைத்தும் கிரக தொடர்புடையவை. உணவை சரி செய்தால் உடல் சரியாகும். உடல் சரியனால் நம்மை இயக்கும் கிரகங்கள் நம்மை தொந்தரவு செய்வது இல்லை. இப்படித்தான் நம் முன்னோர்கள் கிரகத்தை வென்றார்கள். நீங்களும் கிரகங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

நவ கிரகங்கள்: பிறந்த ஜாதகத்தில் உள்ள நவ கிரகங்களில் ஒன்று தீமை செய்தால் ஒன்று நன்மை செய்யும். கிரகங்களும் வழிகாட்டவில்லை. மருத்துவமும் வழிகாட்டவில்லை என்று நொந்து போகவேண்டாம். உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பலம் குறைந்த கிரகங்களை வெல்ல முடியும். நீங்கள் உண்ணும் உணவை வைத்தே உங்கள் கிரக பலத்தை கூட்ட முடியும். சனி பகவானுக்கு சரியான தீனி போட்டால் மற்ற கிரகங்களிடம் இருந்து ஏதும் பறிக்க முயற்சி செய்ய மாட்டார் என்கிறார் ஜோதிடர் சூர்ய ஜெயவேல்.
பாரம்பரிய உணவுகள்: கம்பு, கேழ்வரகு களி வகைகள்,பழையசோறு,இது எல்லாம் பாரம்பரிய உணவு இவை எல்லாம் சனியின் உணவுகள், சனிக்கு எளிமை தான் பிடிக்கும், இதை அறிந்து முன்னோர்கள் சத்தாக உண்டு சனியை அடக்கினார்கள், ஆண்மை குறைவு என்ற வியாதியை இல்லாமல் வாழ்ந்து சென்றார்கள், ஏழரை சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி என்று பயந்து பயந்து வாழவில்லை, இந்த உணவுகள் எடுத்ததால் சனி எந்த பிரச்சனையும் கொடுக்கவே இல்லை. உணவின் மூலம்,கிரகங்களை வென்றவர்கள் நம் முன்னோர்கள் எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் போதும் எந்த கிரக பாதிப்பும் எதுவும் செய்யாது.
என்ன சாப்பிடலாம்: சோளம், சிவப்பு அரிசி, கோதுமை, சாப்பிடலாம். யோக ஆசனம் செய்வது சூர்ய நமஸ்காரம் செய்வதும் சூரியனின் உணவுகள் என்று மருத்துவ ஜோதிடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. நீர் அதிகம் குடிக்கலாம். இது சந்திரனுக்கு ஏற்றது.

அசைவ உணவுகள்: ஆட்டு கறி, ஈரல், பீட்ருட், கேரட், மல்லிச்செடி, புதினா செடி, துளசி, அனைத்து கீரை வகைகள், முக்கியமாக அகத்தி கீரை, குதிரை வாலி தானியம் மற்றும் விளையாடுதல் வேகமாக ஓடுதல் இது போன்ற செயல்கள் செய்ய செய்ய இந்த உணவுகளை உண்ண உண்ண செவ்வாய் என்னும் கிரகம் பலம் குறைவாக இருந்தலும் பலம் கூடிவிடும். மாதுளை,பேரீச்சை, செவ்வாழை,பழங்களும் செவ்வாய் பலத்தை கூட்டி விடும்
பச்சை காய்கறிகள்: பச்சை நிற காய்கறிகள், பச்சை பயறு, சுண்டல் வகைகள்,கற்றாழை, வெங்காயம் சாப்பிடலாம். புத்திரகாரகன் குரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தொப்பையை உருவாக்கி தருபவர் ஆண்மைக்குறைவுக்கு தொப்பையும் ஒரு காரணி அப்போ அவரை கவனிக்க மஞ்சள் நிற வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி பழம், உலர்ந்த திராட்சை, கொண்டை கடலை சாப்பிடலாம்.
சுக்ரன் உணவுகள்: பசும்பால்,தேங்காய் பால் போன்றவை சுக்கிரன் பலத்தை கூட்டும். கொட்டை வகைகள் அதாவது சூரிய காந்தி விதைகள் பாதம் பருப்பு,சிவப்பு பூசணி விதைகள் சுரைக்காய் விதைகள் நிலக்கடலை இவை எல்லாம் சுக்ர சுக்கிலத்தின் தரத்தை உயர்த்தும் சுக்ர பலம் இல்லாத ஜாதகர்கள் உண்டு வர சுக்ரன் பலம் கூடி விடும்.
நுங்கு பதநீர்: கோடை காலத்தில் பனைமர பதநீர் , நுங்கு சாப்பிடலாம். எள்ளு, எள்ளுருண்டை, கருப்பட்டி, வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல், நல்லெண்ணெய் ஆயில் புல்லிங் செய்தால் சனி மற்ற கிராகத்திடம் இருந்து எதையும் பறிக்காது. இது மற்ற கிரகங்களை தொந்தரவு செய்வது இல்லை. உடல் உறுப்புகளை சேத படுத்தாமல் இருப்பார் அவரின் காரகமான தொழிலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து உழைக்க வைப்பார். இது சாதாரண நிலையிலும்,அர்த்தாஷ்டம, மற்றும் அஷ்டம மற்றும் ஏழரை சனி நிலைகளிலும் மனிதனை துன்பப்படுத்தாமல் அவர் வேலையை செய்து கொண்டு இருப்பர்.

ராகு கேது: ராகு உணவு மூலம் கிடைக்கும் உடல் சக்தியை வெளியேற்ற முயற்சி செய்யும். கேது உணவின் முலம் பெறப்பட்ட சக்தியை மருந்தாக செயல்படுத்தி உடலில் தேக்கி வைக்க முயற்சி செய்யும். நாம் உணவுகள்தான் இன்றைக்கு பல பிரச்சினைகளுக்குக் காரணம். சத்தான உணவுகளை உண்டு நவகிரகங்களை சாந்தப்படுத்தினாலே போது நோய்களை வெல்ல முடியும். கிரகங்களை வலுவாக்க முடியும்.
இறைவழிபாடு: எல்லா உணவுகளையும் மருந்தாக மாற்றி நலம்பெற செய்பவர் கேது பகவானே. அதே நேரம் மது, சிகரெட் புகை, ப்ரைடு ரைஸ், சிப்ஸ் போன்றவையும் குளிர்பானங்களும் ராகுவிற்கு காரகம். இவற்றை தவிர்த்தாலே போதும் ஆண்மை குறைவு நீங்கும். ஆண்கள் மகாலட்சுமியை வணங்கலாம். பெண்கள் பெருமாளை வணங்கலாம். ராகு கேது நீர் ராசியில் நின்றால் சிவனை வழிபட ஆண்மை குறைபாடு நீங்கும். ஆனந்தம் பெருகும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications