என்ன பட்ஜெட் இது.! வரிச்சுமை அதிகமா இருக்கு.. நடுத்தர மக்களுக்கு அநீதி.. ராமதாஸ் விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் இருந்தாலும் வரிச்சுமை சற்று அதிகமாகவே இருப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக விமர்சித்துள்ளது.

நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மத்திய பட்ஜெட்டிற்கு தற்போது வரை கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாமக, இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளது,

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ஏழை மக்களின் வருமானத்தை பெருக்குவதற்கான திட்டங்கள் எதுவுமே பட்ஜெட்டில் இல்லையே இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என கூறியுள்ளார், இது போக எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்,

கோரிக்கையை செவிமெடுக்கவில்லை

கோரிக்கையை செவிமெடுக்கவில்லை

மாத வருமானம் பெறுவோர் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை வரியாக செலுத்தி வருகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வலுவான கோரிக்கை எழுந்ததுஆனால் மக்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசு செவிமெடுக்கவில்லை.

செய்ய தவறிய மத்திய அரசு

செய்ய தவறிய மத்திய அரசு

மேலும் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் 5 கோடி வரையிலும், 5 கோடிக்கு அதிகமாக இருப்பவர்களுக்கும் முறையே 3%, 7% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 2013-14 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 78% அதிகரித்துள்ளது அதே போல வரி செலுத்துவோர் எண்ணிக்கை 48% அதிகரித்துள்ளது என மத்திய அரசு தான் கூறியது. அதன் பயன்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை செய்ய தவறிவிட்டதை பார்க்கும் போது நடுத்தர வர்க்கத்தினரின் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே உணர முடிகிறது என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களுக்கு அதிகரித்த சுமை

மக்களுக்கு அதிகரித்த சுமை

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10% லிருந்து 12.5% ஆக உயர்த்தி இருப்பதும் ஏற்று கொள்ள முடியாதது.ஏற்கனவே தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி வரும் நேரத்தில் இந்த வரி உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.700 வரை உயரும் அபாயம் உள்ளது அதே போல பெட்ரோல், டீசல் மீது ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருப்பது அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும்.

புறநானூற்று பாடலுக்கு முரணான செயல்

புறநானூற்று பாடலுக்கு முரணான செயல்

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டினார். ஆனால், அவர் அறிவித்துள்ளவரி உயர்வுகள் பிசிராந்தையார் கூறிய அறிவுரைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

அதிகரித்துள்ள வரிச்சுமை

அதிகரித்துள்ள வரிச்சுமை

அதேநேரத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை, இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் வளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கைகள் வரிச்சுமை சற்று அதிகமாகவே உள்ளது என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+