இன்னோவா கார், டேபிள்ல ஃபைல்.. 5.30 மணிக்கு மேல் போன் போடாதீங்க.. இதுவா விஜய் சொன்ன வெளிப்படைத்தன்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் அன்று கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்டி தங்களது சாதனைகளாக இந்த தவெக அரசு காட்ட முயற்சிக்கிறது. 100 நாட்களில் இவர்களால் எந்தவொரு புதிய திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. இவர்களால் என்றுமே ஸ்டாலின் ஆட்சியின் சாதனையை முறியடிக்கவும் முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

Tamil Niram சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவர் ஒரு "சாதனை மன்னராகவும்", "அடுத்த 25 ஆண்டுகள் ஆளப்போகும் தலைவராகவும்" ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் மிகைப்படுத்திப் பிம்பங்களை உருவாக்குகிறார்கள். இந்தத் தேவையற்ற பில்ட்-அப்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

Vijay Transparency

திமுகவை குறை சொல்றதே வேலை

விஜய் தனது ஆட்சி வெளிப்படைத்தன்மை கொண்டது என்று சொல்கிறார்.. ஆனால், உண்மையில் அந்த வெளிப்படைத்தன்மை எங்கே இருக்கிறது? கடந்த மே மாதம் 27ம் தேதி அவர் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், கேபினட் செயலாளர் டிவி சோமநாதனையும் சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்புகளுக்கு பிறகு, தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் திடீரென ரத்து செய்துவிட்டு அவர் சென்னைக்கு ஓடிவந்தார்.

ஸ்டாலின் ஆட்சி சாதனை

மத்திய அதிகாரிகளுடன் அப்படி என்னதான் பேசப்பட்டது? அந்தச் சந்திப்பின் பின்னணியை அவர் ஏன் வெளிப்படையாக மக்களுக்கு சொல்ல மறுக்கிறார்? அரசு அதிகாரிகளிடம் அவர் நடந்து கொள்ளும் முறையும், ஆலோசனைகளைப் பெறும் விதமும் அவரது நிர்வாக திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இன்னொரு பக்கம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய பெயர்களை சூட்டி தங்களது சாதனைகளாக இந்த அரசு காட்ட முயற்சிக்கிறது. 100 நாட்களில் இவர்களால் எந்தவொரு புதிய திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. இவர்களால் ஸ்டாலின் ஆட்சியின் சாதனையை முறியடிக்கவும் முடியாது.

சட்டமன்றத்தில் திமுக மீது பழிகளைச் சுமத்துவதையே எதிர்க்கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன. மின்கட்டண உயர்வு, பதிவுத்துறை ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு இப்போதுள்ள மக்கள் பிரச்சனைகளுக்கு எந்த பதில்களையும் இந்த அரசால் வழங்க முடியவில்லை.

விஜய் அரசு மீது மிகையான பிம்பங்கள்

தமிழகத்தில் கொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளன. காவேரி நதிநீர் பிரச்சனை மற்றும் கர்நாடக அரசால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் எனப் பல முக்கியப் பிரச்சனைகள் நம் கண்முன்னே நடக்கின்றன. வனத்துறை சட்டப்படி வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட வேண்டிய ஒரு சின்ன விஷயத்திற்காக மனித உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து ஒரு கமிஷன் அமைத்து நியாயமான விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் முன்வரவில்லை.

வெறும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வைத்துக் கொண்டும், சோஷியல் மீடியா பிரச்சாரங்களை நம்பிக் கொண்டும், சட்டமன்றத்தில் ஆதாரமற்ற மிரட்டல்களை விடுப்பதன் மூலமும் ஒரு வலிமையான ஆட்சியை நடத்த முடியாது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை உடைத்துவிட்டு, மக்கள் எதிர்கொள்ளும் நிஜமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்...

எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு இன்னோவா கார்

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு இன்னோவா கார் வேண்டும் என்று சடடமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார்கள்.. "கொடுத்ததெல்லாம் கொடுத்தார், யாருக்காக கொடுத்தார்" என்ற பாணியில் இன்னொரு எம்எல்ஏ பாட்டு பாடி, கேள்வி எழுப்புகிறார்.

இதுவரை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கி, பஸ்கள் மூலமாகவே சட்டமன்றத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள்.. தொகுதியில் சென்று மக்கள் பணியாற்றுவதற்காகத்தான் கார் தேவைப்படுகிறது என்றால், இப்போதுள்ள எம்எல்ஏக்கள் அப்படி என்ன மிகப்பெரிய மக்கள் பணிகளைச் செய்துவிட்டார்கள்?

மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளுக்கு எந்தவொரு பதிலும் அளிக்காத சூழலில், "வெளிப்படைத்தன்மையான ஆட்சி நடத்தப்படுகிறது" என்று விஜய் சொல்வது தவறான கூற்றாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+