நடிகர் தனுஷ் கேட்கும் பெரிய பதவி.. ஒப்புக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் அதிமுக தலைமை இடையிலான பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதிமுகவில் இணைய ஒப்புக்கொண்ட தனுஷ், தன் தரப்பில் இருந்து இணை பொதுச்செயலாளர் பொறுப்பு கேட்டு டிமாண்ட் வைத்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
நடிகர் தனுஷ் திடீரென தனது ரசிகர் மன்ற கட்டமைப்பு வலுப்படுத்த தொடங்கி இருக்கிறார். ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியுள்ள தனுஷ், திடீரென டெல்லிக்கு பயணித்து சில அரசியல் தலைவர்களை சந்தித்து இருக்கிறார். இதன்பின் மகளிரணி கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நற்பணி மன்ற உறுப்பினர் சேர்க்கையையும் அதிகரித்து வருகிறார்.

இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனுஷை நாடி அதிமுக செல்லலாம். அதிமுகவை நாடி தனுஷ் வரலாம் என்று பேசி ஆச்சரியம் கொடுத்திருந்தார். இதன் மூலமாக அதிமுகவின் அடுத்த தலைமைக்கு தனுஷ் தயாராகி வருவதாக பேச்சுகள் எழுந்தன. தனுஷ் வருகையின் மூலமாக இளைஞர்கள் மற்றும் மகளிர் வாக்குகளை கைப்பற்ற முடியும் என்றும் அதிமுகவினர் குஷி அடைந்தனர்.
ஆனால் தனுஷ் டெல்லியில் இருந்து வந்த பின் அதிமுக தலைகளுடன் சில கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதில் தனுஷ் தரப்பில் அதிமுகவில் இணைந்தால், தனக்கு இணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி, தனுஷின் டிமாண்ட்டை ஏற்க மறுத்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகே, மதுரையில் எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததை போல் தனக்கும் அடிக்கும் என்று தனுஷ் நம்புகிறார் என்று பேசியதாக தெரிகிறது. ஆனால் தனுஷ் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்க அதிமுகவினர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நவம்பர் 1ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படவுள்ளது. தனுஷ் வருகையால் நடக்கும் மாற்றங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேச நிர்வாகிகள் தீவிரமாக இருக்கின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
