சமையல் தொழிலில் அப்பாவை மிஞ்சிய மகன்! விஐபிக்கள் வீட்டு விசேஷங்கள் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜ் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் தொழிலும் இப்படிப்பட்ட புதுமைகளை புகுத்த முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு, தமிழகத்தின் விஐபிக்கள், விவிஐபிக்கள் வீட்டு விசேஷங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்.

இன்றைய கால இளைஞர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கக் கூடிய சிலரை பற்றி ஒன் இந்தியா தமிழ் செய்தியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதம்பட்டி ரங்கராஜை பற்றி இப்போது பார்க்கலாம்.

Inspiring story about Madhampatty pakashala MD Madhampatty Rangaraj

கோவை மாவட்டம் மாதம்பட்டியில் ''மாதம்பட்டி பாகசாலா'' என்ற பெயரில் கார்ப்பரேட் சமையல் நிறுவனத்தை நடத்தி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் ஹீரோ தான் இவர். தனது தந்தை சமையல் கலைஞராக சாதாரண முறையில் சமையல் தொழில் செய்து வந்த நிலையில், அதனை வேறலெவலுக்கு எடுத்துச்சென்று மாதம்பட்டி ரங்கராஜ் டீம் சமைத்த உணவை சாப்பிடாத விஐபிக்களே இல்லை என்ற நிலையை உருவாகக்கியுள்ளார்.

கடந்தாண்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் நடத்திய விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டதுடன் மாதம்பட்டி ரங்கராஜ் டீம் சமைத்த தென்னிந்திய உணவு வகைகளை ருசித்துவிட்டு பாராட்டக் கூடச் செய்திருக்கிறார். அதேபோல் தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, முன்னணி நடிகர், நடிகைகள் என பலரும் மாதம்பட்டி பாகசாலா உணவை ருசித்திருக்கின்றனர்.

காலத்திற்கேற்ப சமையல் தொழிலில் அட்வான்ஸ் டெக்னாலஜிகளை புகுத்திக்கொண்டார். தினமும் கோவையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 4,000 கிலோ அரிசியில் காலை, மதியம் என 2 வேளைகளும் சாப்பாடு சமைத்து கொடுத்து வருகிறார். இவர் எந்த ஊரில் சமையல் ஆர்டர் எடுத்தாலும் சரி, கோவையிலிருந்தே சிறுவாணி தண்ணீரை கேன்களில் அடைத்து அதனை தனியாக ஒரு லாரியில் எடுத்துச் சென்றுவிடுகிறார்.

தனது சிறுவயதில் தந்தையோடு அவர் சமையல் செய்யும் இடங்களுக்கு சென்றிருப்பதாகவும், அப்போது கல்யாண வீட்டுக்காரர்கள் ''சமையல்காரன் வந்துட்டானா'' என்று தான் இலக்காரமாக பேசுவார்கள் என்றும் இதனால் தான் சமையல் தொழிலையும் கார்ப்பரேட் லெவலுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் தனக்கு உருவானதாகவும் பல பேட்டிகளில் மாதம்பட்டி ரங்கராஜ் கூறுகிறார். இன்று சுமார் 2,000 பேருக்கு மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் ஊதியம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

வாய்ப்புகளை தேடி அலையாமல் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள கற்றுக்கொண்டால் யாரும் எந்த உயரத்தையும் தொடலாம் என்பதற்கு இவர் போன்றவர்கள் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+