சென்னையில் காசிமேடு மீனவன் என்ற இன்ஸ்டா பிரபலம் கைது.. புரட்டி எடுத்த பொதுமக்கள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதாகும் கவின் என்பவர் காசிமேடு மீனவன் என்ற வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்த ஒரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 15 வயது சிறுமியுடன் என்ன பிரச்சனை.. ஏன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பார்ப்போம்.
சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வரும் 25 வயதாகும் கவின் என்பவர் காசிமேடு மீனவன் என்ற வீடியோ மூலம் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார். இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது இருசக்கர வாகனத்தில் மோதியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதில் அந்த சிறுமி ஆத்திரமடைந்து தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தாராம். இதனால் சிறுமி என்று கூட பாராமல் சிறுமியின் வயிற்றில் கவின் எட்டி உதைத்தாராம். இதை தட்டிக்கேட்டு வந்த சிறுமியின் தந்தையான நாகராஜையும், கவின் தாக்கிய நிலையில் சிறுமியின் உறவினர்களான பெண்கள் பலரும் சேர்ந்து கவினை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து காசிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரியும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அப்போது சிறுமியின் உறவினர்கள் கவினை நோக்கி எறிந்த கல், காவலரின் மூக்கை பதம் பார்த்துள்ளது. மூக்குத்தண்டு உடைந்து ரத்தம் ஒழுகியதாம். சிறுமியின் உறவினர்களின் தாக்குதலில் இருந்து கவினைக் காப்பாற்றி, காவலர் பவித்ரன் பத்திரமாக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்கள்.
இதையடுத்து கவினை தாக்கியதற்காக சிறுமியின் தந்தை நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 15 வயது சிறுமியை வயிற்றில் எட்டி உதைத்தது மட்டுமின்றி, தட்டிக்கேட்க வந்த பெண்கள் மற்றும் சிறுமியின் உறவினர்களை கவின் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் இன்ஸ்டா பிரபலம் கவின் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் காசிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட சாதாரண சண்டை பெரிய பிரச்சனையாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications