இன்ஸ்டா ரீல்ஸ் அதிகம் பார்க்குறீங்களா.. அப்போ முதலில் இதை படிங்க! மதுவுக்கு நிகரான ஆபத்தாமே! ஐயோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) மொபைல் போன்கள் ஒரு காலத்தில் அழைப்புகளுக்கே மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், இன்று ஒவ்வொரு நொடியையும் ஆக்கிரமிக்கிற முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக மாறியுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்த்து அதற்கு அடிமையாகுகின்றனர். இன்ஸ்டா ரீல்ஸ் அதிகம் பார்ப்பது, மதுவுக்கு நிகரான ஆபத்தை கொடுக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற குறுகிய வீடியோக்கள் மூளையின் வெகுமதி அமைப்பை தூண்டி, டோபமைன் வெளியீட்டினால் டிஜிட்டல் அடிமைத்தனத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

instagram-scrolling-reels-may-alter-brain-activity-similar-to-alcohol-use

ஒரு காலத்தில் தொலைபேசி அழைப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது முற்றிலும் மாறிவிட்டன. சிறந்த பொழுதுபோக்கு கருவியாகவும் ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலரும் தொலைக்காட்சி பார்ப்பதையே மறந்துவிட்டார்கள் என சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ்அப், யூடியூப், ஓடிடி தளங்கள் என ஸ்மார்ட்போன்கள் ஒருவரது மொத்த ஓய்வுநேரத்தையும் காலி செய்து விடுகின்றன. அதிலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வந்த பிறகு, அதிக அளவு செல்போன்களில் பலரும் நேரத்தை செலவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த ரீல்ஸ் வீடியோக்களை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வருவோம் என சென்றால்.. நேரம் போனதே தெரியாமல் அதிலேயே மூழ்கிவிடுவதாக பலரும் அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம்.

மதுபோதைக்கு அடிமையாவது போல

இந்த நிலையில், ரீல்ஸ்களை பார்ப்பது மதுபோதைக்கு அடிமையாவது போன்ற நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. Neuromiage என்ற அறிவியல் இதழ் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரீல்ஸ் போன்ற குறுகிய நேர வீடியோக்கள், மூளையில் 'வெகுமதி அமைப்பை' தூண்டி டோபமைன் எனப்படும் ஹார்மோனை அதிக அளவில் வெளியிடுகின்றதாம். இது மூளையை தொடர்ச்சியாக அடிமையாக்கி மேலும் அதிக வீடியோக்களை தேட தூண்டுகிறது. "5 நிமிடம் ரீல்ஸ் பார்க்கலாம்" எனத் தொடங்கி, மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்க்க நேரம் எடுத்துக்கொள்வது இதனால்தான் என்று கூறப்படுகிறது.

மூளையை பாதிக்கிறது

அதிகபடியான பயன்பாடு, மூளையின் முன்பகுதி மற்றும் ஹிப்போகாம்பஸ் போன்ற பகுதிகளை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், கவனம் செலுத்துதல், முடிவு எடுக்கும் திறனும், நினைவாற்றலும் பாதிக்கப்பட்டு 'டிஜிட்டல் டிமென்ஷியா' ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க, தினமும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரத்திற்குள் மட்டுமே டிஜிட்டல் திரை முன்பு செலவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனநலம் பாதிப்பு, மன அழுத்தம்

குறுகிய நேர வீடியோக்களுக்கு அடிமையாகி கிடப்பது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சராசரியாக 151 நிமிடங்கள் இப்படி வீடியோக்களுக்காக நேரத்தை செலவிடுகிறார்கள். குறுகிய வீடியோக்கள் அதிகம் பார்ப்பதன் மூலம், தூக்க பாதிப்பு, மனநலம் பாதிப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

* தினமும் டிஜிட்டல் திரை நேரத்தை 2-3 மணி நேரத்திற்குள் கட்டுப்படுத்துங்கள்
* ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போன்ற வீடியோக்களை "break time" அளவில் மட்டும் பயன்படுத்துங்கள்
* தினசரி நேர அட்டவணையில், offline செயல்கள் புத்தகங்கள், செய்தித்தாள் வாசிப்பு, நடைப்பயிற்சி, நேரடி உரையாடல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+