இன்ஸ்டாகிராம் சத்தமின்றி செய்த அப்டேட்.. உஷாரா ஷேர் பண்ணுங்க.. இல்லைன்னா "கையும் களவுமா" மாட்டுவீங்க
சென்னை: இன்ஸ்டாகிராமில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரைவசி பாதிக்கும் வகையில் ஒரு அப்டேட் நிகழ்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், ஷேர் சாட் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் முக்கியமான விஷயங்களை சில வினாடிகளில் பகிர்ந்து விடுகிறோம்.

அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் மேற்கண்ட சமூகவலைதள கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அது போல் செய்தி நிறுவனங்கள், தனிநபர்கள் என சமூகவலைதள கணக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் புகைப்படம், வீடியோக்கள், தகவல்கள் உள்ளிட்டவைகளை அந்த கணக்குகளில் பகிர்கிறார்கள். அதை தனி நபர்கள், விருப்பப்பட்டவர்கள் பின்தொடரலாம். குடியரசுத் தலைவர் முதல் கவுன்சிலர் வரை அனைத்து தரப்பினரும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகளை சமூகவலைதளங்களில்தான் சொல்கிறார்கள்.
அப்படிப்பட்ட சமூகவலைதளங்களில் முக்கியமானது இன்ஸ்டாகிராம். இதில் ஏராளமானோர் சினிமா நடிகர், நடிகைகளை ஃபாலோ செய்கிறார்கள். பலர் 2 அல்லது 3 அக்கவுன்ட்டுகளை கூட வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் முதலில் ஐபோனில் மட்டும்தான் இருந்தது.
பிறகு இதை மெட்டா நிறுவனம் வாங்கிவிட்டதை அடுத்து 2012 ஆம் ஆண்டு முதல் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் இந்த சேவை கிடைக்கிறது. இந்த நிலையில் பொதுவாக சமூகவலைதளங்களில் மாற்றம் ஏதேனும் என்றால் அதற்கான அறிவிப்பு முதலில் வரும். அதன் பிறகுதான் அந்த மாற்றங்கள் செய்யப்படும்.
ஆனால் தற்போது ஒரு மாற்றமானது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்ஸ்டாவிலிருந்து ஒருவர் வாட்ஸ்அப் போன்ற பிற அப்ளிகேஷன்களுக்கு எதையாவது ஷேர் செய்தாலே ஷேர் செய்தவர் அக்கவுன்ட் பெயர் வருவதோடு, இவரை பாலோ செய்யலாமே என்ற ஆப்ஷனை கொடுத்துள்ளது.
உங்களுக்கு யாராவது ஒருவர் இன்ஸ்டா லிங்கை அனுப்பினால், "இந்த யூசர் நேம் பெயர் போட்டு" shared this post with you என வருகிறது. இப்படி அக்கவுன்ட் பெயரை காட்டுவது பிரைவசியை பாதிக்கும் என நெட்டிசன்கள் கவலையில் உள்ளனர். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது 3 அக்கவுன்ட்டுகளை வைத்திருக்கிறார்கள், அவர்கள் வேறு அக்கவுன்ட்டிலிருந்து ஷேர் செய்தால் அவர்களுடைய தனிப்பட்ட அக்கவுன்ட் பெயர் காட்டி விடுகிறது.
இது ஆன்ட்ராய்டு போனுக்கு வரும் லிங்குகளுக்கு காட்டவில்லை என்றும் ஐபோன்களுக்கு மட்டும் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எப்போதுமே ஒரு மாற்றத்தை சோதனை செய்ய முதலில் ஐஓஎஸ் சாப்ட்வேரில் செக் செய்துவிட்டு பிறகுதான் ஆன்ட்ராய்டுக்கு வரும் என தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications