இன்ஸ்டா ரீல்ஸ் முழுக்க இவர்தான்! திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்ட.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. பின்னணி
சென்னை: இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக டிரெண்டாகி வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

யார் இவர்? தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் ரிப்ளை ஒன்று நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.
முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.
பாஜகவை சேர்ந்த சில பெண் தலைவர்கள் பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவறாக பேசிய நிலையில் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் அவர் விளக்கம் கொடுத்து ,மன்னிப்பு கேட்ட பின் சில நாட்கள் கழித்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.
மீண்டும் மோசம்: இந்த நிலையில்தான் இவர் சமீபத்தில் மீண்டும் மேடை ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசினார். ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கருணாநிதியின் 100 நாள் பிறந்தநாள் விழா கூட்டத்தில்தான் அவர் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். முக்கியமாக பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை சொல்லி அவர் கடுமையாக பேசி இருந்தார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த முறை மொத்தமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை வைத்து அவர் பேசி இருந்தார்.
இழிவான பேச்சு: சென்னை எருக்கஞ்சேரியில் கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ரவி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து இழிவாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் கூறிருந்தார். ஆனால் இவருக்கு ஜாமீன் வழங்கப்படாத நிலையில் .. இந்த வழக்கில் அவர் கைதாகி அதன்பின் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக டிரெண்டாகி வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications