இன்ஸ்டா யூஸ் பண்ணுறீங்களா.. இனி ஆயிரம் பாலோயர்ஸ் இருந்தால்தான் இந்த வசதியாம்.. போச்சு போங்க
சென்னை: இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது. அதாவது, இனிமேல் குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது வரை எந்தவொரு பயனரும், லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்கள் அத்தியாவசிய செயலியாக மாறிவிட்டது என்று சொன்னால் மிகையல்ல.

இனிமேல் பயன்படுத்த முடியாது
அந்த அளவு பயனர்கள் இடையே இன்ஸ்டகிராம் போன்ற செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இன்ஸ்டா ரீல்ஸ்கள் தற்போது இந்தியாவில் ரொம்பவே பிரபலமாகிவிட்டதால் இன்றைய 2 கே கிட்ஸ்கள் மட்டும் இன்றி 80, 90 கிட்ஸ்கள் கூட அதில் மூழ்கி கிடப்பதை காண முடிகிறது. பயனர்களை கவருவதற்காக அவ்வப்பொது புதிய அப்டேட்களை இன்ஸ்டகிராம் அளித்து வருகிறது.
அந்த வகையில், இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது. அதாவது, இனிமேல், குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது வரை எந்தவொரு பயனரும், லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்தது.
பயனர்கள் கடும் அதிருப்தி
டிக்டாக் விதித்துள்ள 1,000 பின்தொடர்பவர்கள் நிபந்தனையை போல இன்ஸ்டாவும் கொண்டு வந்துள்ளது. இனி லைவ் செல்ல முயற்சிக்கும் தகுதியற்ற பயனர்களுக்கு, அதாவது ஆயிரம் பாலோயர்களுக்கு கீழ் வைத்து இருக்கும் பயனர்களுக்கு "உங்கள் கணக்கு லைவ் அம்சத்திற்கு இனி தகுதியற்றது" என்ற மெசேஜ் தோன்றும். இன்ஸ்டாவின் இந்த முடிவு இன்ஸ்டா பயனர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்திற்கான குறிப்பிட்ட காரணத்தை இன்ஸ்டாகிராம் வெளியிடவில்லை. எனினும், லைவ் வீடியோ பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இதை கொண்டு வந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராமின் இந்த முடிவு தற்போது புதிதாக அக்கவுண்ட் ஆரம்பித்த பயனர்களுக்கு கடும் அதிருப்தியை கொடுப்பதாக அமைந்துள்ளது.
நெட்டிசன்களின் கருத்துக்கள்
தங்களது நண்பர்கள் மத்தியில் லைவ் ஆப்ஷனை பயன்படுத்தி உரையாடிக்கொண்டு இருந்த பயனர்கள், இனி அந்த வசதியை பயன்படுத்த முடியாது என்பதால் அதிருப்தி அடைந்துள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "குறைவான பாலோயர்களை கொண்ட கணக்குகளே அதிக அளவில் இருக்கும் என்பதால், லைவ் ஆப்ஷனை அவர்களுக்கு அணுக முடியாத வகையில், மாற்றியிருப்பது இன்ஸ்டாகிராமின் மிச்சப்படுத்தும் நடவடிக்கையை இருக்கக்கூடும்" என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "இன்ஸ்டாவில் நாமெல்லாம் ஒரு போட்டோ, ரீல்ஸ்தான் பார்க்க போகிறோம்.. லைவ் ஆப்ஷனை பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "அதிக பாலோயர்களை வைத்து இருப்பவர்களை வைத்து இன்ஸ்டாகிரம் வருமானம் பார்க்கிறது. எனவே, குறைவான பயனர்களுக்காக மெனக்கெட இன்ஸ்டா விரும்ப வில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications