அமித்ஷாவா சந்தான பாரதியா? போஸ்டர் அடிச்சவரே குழம்பிட்டாரே.. உண்மை தெரிஞ்சாகனும்.. யாரு ஒட்டுனது?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்திற்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள். பாஜகவிற்கு வாக்கு கேட்டு இந்த போஸ்டர் வீட்டின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே இந்த போஸ்டரை பாஜகவினர் ஒட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது கட்சியினர் வேண்டுமென்றே ஒட்டி கலாட்டா ஏற்படுத்த வேண்டும் என்று பரப்பி உள்ளார்களா என்பது தெரியவில்லை.. பாஜகவினர் இப்படி ஒட்டவில்லை என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள்..

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு பலமுறை வந்து பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதனிடையே மீண்டும் வரும் ஏப்ரல் 15-ந்தேதி தமிழகம் வர உள்ளார்.
இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிக்கிறது.
ஏனெனில் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று தான் (வெள்ளிக்கிழமை) தொடங்கி உள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் இன்று முதல் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு காரணங்களை காட்டி, மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம் இன்று மாலை 6.15 மணி அளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்க உள்ளது. அந்த பேரணி, ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீன மடம் அருகே நிறைவடைய போகிறது.
செல்லும் வழியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு புறப்பட உள்ளார். முன்னதாக சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை காரைக்குடியில் நடக்க இருந்த வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அவர் காரைக்குடி செல்லவில்லை.. தேவநாதன் யாதவ் மீது காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது ஒருபுறம் எனில், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவதை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் மதுரையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் ஏப்ரல் 12ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை வரவேற்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரில் அமித்ஷாவிற்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி படம் இடம் பெற்றிருந்தது. இது தான் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த போஸ்டரை பாஜகவினர் ஒட்டவில்லை என்றும், யாரோ வேண்டுமென்றே ஒட்டி குழப்பம் ஏற்படுத்த முயலுவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications