ஊறுகாய் போட சொல்லிக் கொடுங்க.. மகளிர் உரிமை தொகை குறித்து விமர்சித்த சீமான்.. திமுக கடும் எதிர்வினை
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பதிலாக கிராமப்புற பெண்களுக்கு ஆடு மாடு வளர்த்தல், நகர்ப்புற பெண்களுக்கு ஊறுகாய் போட சொல்லிக் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 சட்டசபைதேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில சுமார் 2.5 ஆண்டுகளுக்கு பின்னர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி மாதம்ஆயிரம் ரூபாய் மகளிரின் வங்கி கணக்கில் இனி ஒவ்வொரு மாதமும் விழுக போகிறது. இந்த திட்டத்தை பாஜகவோ, அதிமுகவோ எதிர்க்கவில்லை. மாறாக அனைத்து பெண்களுக்கும் கொடுப்பதாக சொல்லித்தானே திமுக ஓட்டுக்கேட்டது. அன்று தேர்தலின் போது, தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறவில்லை என்றே விமர்சித்து வருகின்றன.
ஆனால் இந்த திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து எதிர்த்து வந்தார். இந்த திட்டத்திற்கு பதிலாக, எங்கள் வீட்டு பெண்கள் சுயசார்புடன் வாழ கற்றுக்கொடுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார். அவர்களே பொருளாதாரரீதியாக பலம் பெரும் வகையில் முதலீடு செய்யலாம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பதிலாக கிராமப்புற பெண்களுக்கு ஆடு மாடு மேய்க்க,நகர்ப்புற பெண்களுக்கு ஊறுகாய் போட சொல்லிக் கொடுக்க வேண்டும்-சீமான்
— Shafeeq (@shafeeqkwt) September 19, 2023
க்யூட்ல…🤣🤣🤣🤣 pic.twitter.com/0BVBGXPiCR
மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து சீமான் பேசுகையில், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக ஆண்டுக்கு செலவழிக்கப்படும் 12 ஆயிரம் கோடியை முதலீடு செய்து,சிறுகுறு தொழில்களை செய்கிற, எங்கள் மக்களுக்கு பயிற்சி கொடுங்கள்.
கூடை பிண்ணுதல், பட்டுப்பூச்சி வளர்த்தல், நாட்டுக்கோழி வளர்த்தல், ஆடு மாடு வளர்த்தல் போன்ற தற்சார்பு பொருளாதாரத்திற்கு என் மக்களை தள்ளுங்கள். நகர்புறமா ஊறுகாய் போடுதல்.. என எதையாவது என் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் என்று சீமான் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பலர் சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குலத்தொழில் செய்ய வைக்க வேண்டும் என்று தான் போய் சீமான் நிற்பார் என விமர்சித்து வருகிறார்கள்..
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications