மதுப்பழக்கம் இருந்தால் இன்சூரன்ஸ் தொகை நிராகரிப்பா? நுகர்வோர் ஆணையம் வெளியிட்ட முக்கிய தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன்பே தனக்கு குடிப்பழக்கம் இருப்பதை பாலிசிதாரர், காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி இருந்தால், காப்பீட்டு தொகையை மறுக்க முடியாது என்று நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

திடீர் மருத்துவ செலவு, வீட்டில் வருமானம் ஈட்டும் நபரின் திடீர் உயிரிழப்பு போன்ற இக்கட்டான காலகட்டங்களில் யாரிடமும் போய் உதவி கேட்டு நிற்க வேண்டியது இல்லை என்பதோடு, ஆபத்து காலங்களில் நிதி உதவி அளிக்கும் என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Insurance claim cant be denied if alcohol consumption disclose before policy Consumer Commission

இன்சூரன்ஸ் தொகை

மக்களுகு இது நெருக்கடியான காலங்களில் பலனளித்தாலும், ஆனால், சில நேரங்களில் இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்குள், பாலிசிதாரர்களை நிறுவனங்கள் ஒருவழியாக்கிவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. சில நேரங்களில் அற்ப காரணங்களை காட்டி இன்சூரன்ஸ் தொகையை நிராகரிக்கவும் செய்கின்றன.

இப்படியான ஒரு நிகழ்வுதான் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நுகர்வோர் ஆணையத்தை நாடி தனக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டுதொகை கிடைப்பதை உறுதி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

காப்பீட்டு தொகை

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காப்பீட்டு நிறுவனதில் ஆயுள் காப்பீடு ஒன்றை வாங்கியுள்ளார். இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு எடுத்த இரண்டே ஆண்டுகளில் அதாவது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அவர் திடீரென உயிரிழந்தார். கணவர் இறந்துவிட்டதால், அவரது மனைவி காப்பீட்டு தொகை கோரி விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த காப்பீட்டு நிறுவனம், பாலிசியையும் ரத்து செய்ததோடு, செலுத்தப்பட்ட பிரீமியம் தொகையான ரூ.18,713-க்கான காசோலையையும் அனுப்பி வைத்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு வர வேண்டிய காப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும் என்றும் மன உளைச்சலுக்காக இழப்பீடும் வேண்டும் என்று கூறி நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, காப்பீட்டு நிறுவனம் சார்பில் புகார்தாரரின் கணவருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை வைத்தது.

விஸ்கி அருந்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்

அதாவது, இறந்த நபர் தனது நீண்டகால மதுப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் குறித்த தகவல்களை மறைந்த்துள்ளார். நம்பிக்கையுடன் முழுமையான கவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற காப்பீட்டு கொள்கைக்கு எதிரானது அவரது செயல் இருந்துள்ளது" என்று வாதிட்டது. எனினும், பாலிசி வழங்கப்படுவதற்கு முன்பு சமர்பிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைப் படிவத்தில், கடந்த 15 ஆண்டுகளாக மாதத்திற்கு 2 முறை, தலா 90 மி.லி. விஸ்கி அருந்தி வருவதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் என்று நுகர்வோர் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

50 லட்சம் வழங்க உத்தரவு

பாலிசி எடுப்பதற்கு முன்பே புகார்தாரரின் கணவர் மது அருந்தும் பழக்கம் குறித்து தெளிவாகத் தெரிவித்திருந்தார். எனவே, சட்டப்படி வழங்க வேண்டிய காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்துள்ளது. இதனால் சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளது" என்று கூறிய நுகர்வோர் ஆணையம், வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு வழங்க வேண்டிய ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகையை, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.10,000 இழப்பீடும், வழக்கு செலவுகளுக்காக ரூ.10,000-ம் வழங்க வேண்டும்" என்றும் அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+